என் வாழ்க்கையை அழித்த நபர்: புடின் மகளாக சந்தேகிக்கப்படும் எலிசவேதா பதிவால் பரபரப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மகளாக பரவலாக நம்பப்படும் 22 வயதான எலிசவேதா கிரிவோனோகிஹ் (Elizaveta Krivonogikh) மீண்டும் சமூக ஊடகங்களில் தோன்றியுள்ளார்.
அவர் எந்த ஒரு பெயரையும் குறிப்பிடாமல், ஒரு நபர் தனது வாழ்க்கையை நாசமாக்கியதாக Telegram-ல் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில், “எனது முகத்தை உலகத்திற்கு மீண்டும் காண்பிக்க முடிவது ஒரு விடுதலை. நான் யாருக்கு பிறந்தேன், என் வாழ்க்கையை அழித்தது யார் என்பதை இது எனக்கு நினைவூட்டுகிறது. அவர் மில்லியன் கணக்கான உயிர்களைப் பறித்த மற்றும் எனது வாழ்க்கையை அழித்த மனிதர்" என தெரிவித்துள்ளார்.
அவர் யாருடைய பெயரையும் நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், ஜேர்மனியின் Bild பத்திரிகை இதன் பின்னணி விளாடிமிர் புடினே என நிச்சயமாக சுட்டிக்காட்டுகிறது.
யார் இந்த எலிசவேதா?
அவர் விளாடிமிர் புடினுக்கும் Svetlana Krivonogikh என்பருக்கும் பிறந்தவராக கூறப்படுகிறது. Svetlana ஒரு காலத்தில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றி, பின்னர் ரஷ்யாவின் முக்கிய வங்கியான Bank Rossiya-வில் பங்கு வைத்திருக்கும் செல்வவதியாக மாறியுள்ளார்.
2020-ல், புடினின் செய்தித்தொடர்பாளர் எலிசவேதா எனும் பெண்ணை ஜனாதிபதி இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என தெரிவித்திருந்தார்.
ஆனால், சமூக ஊடகங்களில் பிரமாண்ட வாழ்க்கை முறையை பகிர்ந்த எலிசவேதா, 2022 உக்ரைன் போருக்குப் பிறகு காணாமல் போனார். இப்போது அவர் 2024-ல் பாரிஸ் ICART கலைக் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Vladimir Putin daughter Elizaveta, Elizaveta Krivonogikh post, Putin family secret, Art of Luiza Telegram, Putin’s personal life, Svetlana Krivonogikh Bank Rossiya, Putin daughter controversy, Russia Ukraine war impact, Elizaveta Paris ICART, Kremlin denies Putin daughter