புடின் கைகளுக்கு என்ன ஆனது? மீண்டும் தலைதூக்கிய உடல்நிலை குறித்த ஊகங்கள்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்த ஊகங்கள் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
புடினின் உடல்நிலை குறித்த ஊகங்கள்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சமீபத்தில் ரஷ்ய ஹெல்தி ஃபாதர் லேண்ட் இயக்கத்தின் தலைவர் 22 வயது எகடெரினா லெஷ்சின்ஸ்காயாவுடன் பொது வெளியில் சந்திப்பு நடத்திய போது எடுக்கப்பட்ட காணொளி காட்சிகள், புடின் உடல்நிலை குறித்த ஊகங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
What's with Putin's hands in this video? https://t.co/hF5yqgEFei pic.twitter.com/xl5Wopj2ID
— Anton Gerashchenko (@Gerashchenko_en) November 9, 2025
காணொளியில், 73 வயது ரஷ்ய தலைவரான புடினின் வலது கையில் சுருக்கங்கள் மற்றும் வீங்கிய நரம்புகள் காணப்படுவதை பார்க்க முடிகிறது.
நியூஸ்வீக் போன்ற பல அறிக்கை வெளியிட்ட தகவலில், ரஷ்ய ஜனாதிபதி புடின் வீங்க கை மற்றும் வலியுடன் இருப்பதாக தெரிகிறது என சுட்டிக் காட்டியுள்ளனர்.
எக்ஸ்பிரஸ் யுகே பத்திரிகை, புடின் கடந்த வாரம் பொது வெளியில் நடத்திய சந்திப்பின் போது, செளகரியமின்றியும், கைகளை முஷ்டிகளாக இறுகி வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைன் உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகர் அன்டன் கெராஷ்சென்கோ X தளத்தில் காணொளியை பதிவிட்டு, புடின் கைகளுக்கு என்ன ஆனது? என கேள்வி எழுப்பியது பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.

இது முதல் முறை அல்ல
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்த ஊகங்கள் எழுவது இது முதல் முறை அல்ல.
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய சில மாதங்களுக்கு பிறகு, வெளியான புகைப்படங்களில் புடின் கையில் மர்மமான கருப்பு புள்ளி இருப்பதாக குறிப்பிட்டு அவரது உடல்நிலை குறித்த ஊகங்களை வெளியிட்டனர்.
புடினுக்கு மட்டுமின்றி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் உட்பட பல்வேறு உலக தலைவர்கள் இத்தகைய ஆன்லைன் ஆய்வுக்கு உள்ளாகியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |