13 மைல்கள் தொலைவில்... உக்ரைன் தலைநகருக்கு அடுத்த ஆபத்து: வெளியான காணொளி
உக்ரைன் தலைநகர் கிவ்வுக்கும் மிக அருகாமையில் ரஷ்ய துருப்புகள் நெருங்கி வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வெளியாகியுள்ள காணொளியில், 13 மைல்கள் தொலைவில் ரஷ்ய இராணுவ டாங்கிகளும், இராணுவத்தினரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு துவங்கி இரண்டு வாரங்களுக்கு பின்னர், ரஷ்ய துருப்புகள் தலைநகர் கிவ்வை நெருங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தலைநகர் கிவ்வின் புறநகர் பகுதியான இர்பின் நகரில் ரஷ்ய துருப்புகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. பல எண்ணிக்கையிலான டாங்கிகள் மற்றும் 20கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும் மெதுவாக குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து நெருங்குவதாக வெளியான காணொளியில் பதிவாகியுள்ளது.
இர்பின் நகரில் இருந்து பெரும்பாலான மக்கள் வெளியேறியுள்ள நிலையில், ரஷ்ய துருப்புகளின் கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி வந்துள்ளது. மேலும், இர்பின் நகருக்கு நேரெதிரே அமைந்துள்ள Bucha நகரில் கடந்த வாரம் ரஷ்ய துருப்புகளின் வாகனங்கள் சின்னாபின்னமாட்டப்பட்டது.
தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் பகுதியில் அமைந்துள்ள மகப்பேறு மருத்துவமனை மீது கொடூர தாக்குதலை ரஷ்ய துருப்புகள் முன்னெடுத்து, போர்குற்றம் புரிந்துள்ள நிலையில், தற்போது இர்பின் நகரில் ரஷ்ய துருப்புகள் முன்னேறிவரும் தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகரின் மத்திய பகுதியில் இருந்து வெறும் 13 மைல்கள் தொலைவிலேயே இர்பின் நகரம் அமைந்துள்ளது. இதனால் இன்னொரு பலமான தாக்குதல் நடவடிக்கை இருதரப்பில் இருந்தும் முன்னெடுக்கபடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
தலைநகர் கிவ்வை கைப்பற்றும் அளவுக்கான எண்ணிக்கை தற்போது இர்பின் நகரில் காணப்பட்ட ரஷ்ய துருப்புகளிடம் இல்லை என்பதும், இவர்கள் உக்ரைன் துருப்புகளால் மிக விரைவில் முறியடிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
எதிர்வரும் சில மணி நேரங்களில் அல்லது ஒரே நாளில் இர்பின் நகரில் ரஷ்ய துருப்புகளின் நடமாட்டம் தொடர்பில் உறுதியான தகவல் வெளிவரும் என்றே நம்பப்படுகிறது.