மொபைல் போனுக்கு பின்னால் பணம் வைக்கிறீர்களா.., இந்த ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு
மொபைல் போனுக்கு பின்னால் பணத்தை வைப்பவர்களுக்கு இந்த பதிவு முக்கியமானது.
என்னென்ன ஆபத்து?
தற்போதைய காலத்தில் மொபைல் போன் என்பது ஒரு மனிதனுக்கு அத்தியாவசிய பொருளாகவே மாறிவிட்டது. காலையில் எழுவது முதல் இரவு தூங்கும் வரை ஆறாவது விரலாகவே மொபைல் போன் மாறிவிட்டது.
மொபைல் போனை நாம் இயக்குவது என்று சொல்வது மாறி நம்மை மொபைல் போன் இயக்குகிறது என்றே சொல்லலாம்.
ஆனால், நம்மில் பலரும் போனிற்கு பின்னால் பணம் மற்றும் ஏடிஎம் கார்டு போன்ற பொருள்களை வைத்திருக்கிறோம்.
இது நமக்கு சாதாரணமாக தோன்றினாலும் இதன் பின்னால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படுத்தும் விடயம் இருக்கிறது. ஏனென்றால் பல மொபைல் போன்கள் வெடித்து தீ பிடித்து எரிவதை நாம் கேள்வி பட்டிருக்கிறோம்.
இதற்கு எல்லாம் மூல காரணம் நமது கவன குறைவு தான். சிலர் மொபைல்களில் நீண்ட நேரம் பேசுவதால் போன் சூடாகிறது. அதோடு, இன்னும் சிலர் மொபைல் போனை ஜார்ஜ் செய்து விட்டு ஆஃப் செய்வதை மறந்து விடுகிறார்கள்.
இதனாலும் மொபைல் போன் சூடாகி வெடிக்கும் நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக மொபைலில் ஏற்படும் ஒரு காந்தப்புலம் நமக்கு ஆபத்தாக மாறுகிறது.
இதனால் தான் நாம் மொபைல் போனுக்கு பின்னால் கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றை வைக்கும் போது சேதமாக வாய்ப்புள்ளது.
மேலும், போனுக்கு பின்னால் வைக்கப்படும் ரூபாய் நோட்டுகளில் உள்ள ரசாயனங்கள் தொலைபேசியில் உருவாகும் வெப்பத்தை வெளியேற அனுமதிக்காது. இதனால் கூட மொபைல் போன் வெடிக்க வாய்ப்புள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |