காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறிய பிவி சிந்து
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.
இன்று காலை நடைபெற்ற பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஹாங்காங் வீராங்கனை நான் யி செங் ஆகிய இருவரும் மோதினர்.
இப்போட்டியில் 21-9, 21-16 என்ற நேர் செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளார் பி.வி.சிந்து.
குரூப் 'ஜே' பிரிவில் முதலிடம் பிடித்து பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்த இந்திய வீராங்கனை பிவி சிந்து மீது இந்த முறை எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
???? ?
— BAI Media (@BAI_Media) July 28, 2021
Rio #Olympics ?medalist @Pvsindhu1 defeats ??'s Cheung NY 21-9, 21-16 in her last group stage outing and with that win she advances to Round of 16 of @tokyo2020 ??#SmashfortheGlory#badminton#Tokyo2020#Cheer4India#TeamIndia #PVSindhu pic.twitter.com/Q7TKTTG6Qu