கனடா வீராங்கனையை வீழ்த்தி முதல் முறையாக தங்கம் வென்ற பி.வி.சிந்து!
காமன்வெல்த் தொடரின் இறகுப்பந்து இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்றார்.
72 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பெர்மிங்காமில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்திய இறகுப்பந்து வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டியில், கனடா வீராங்கனை மிச்செல் லியை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார்.
PC: AP Photo
காமன்வெல்த் போட்டியில் அவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
PC: Twitter
தனது ட்விட்டர் பக்கத்தில், 'பி.வி.சிந்து சாம்பியன்களின் சாம்பியன் ஆவார். அவர் மீண்டும் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.
அவருடைய அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது. காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதற்கு அவருக்கு வாழ்த்துக்கள். அவருடைய எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.