2 மணி நேரமாக மலைப்பாம்பு பிடியில் சிக்கிய பெண்: உயிர் தப்பியது எப்படி?
தாய்லாந்தின் பாங்காக் புறநகரில் உள்ள ஒரு வீட்டில் 64 வயதான பெண் ஒருவர் பிரமாண்டமான ஒரு பாம்பின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளார்.
மலைப்பாம்பு பிடியில் இருந்து தப்பிய பெண்
தாய்லாந்தின் பாங்காக் புறநகரில் உள்ள ஒரு வீட்டில் 64 வயதான பெண் ஒருவர் தினசரி வேலைகளை செய்து கொண்டிருந்தபோது, 13 முதல் 16 அடி நீளமுள்ள மலைப்பாம்பு அவரது தொடையை கடித்து, உடலை சுற்றி இறுக்கி, தரையில் தள்ளியது.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, அந்த பெண் பாம்பின் பிடியிலிருந்து விடுபட போராடியுள்ளார்.
இறுதியில் அவரது அலறல் சத்தத்தை அண்டை வீட்டார் கேட்டு, அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பொலிஸார் மற்றும் விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, பாம்பின் தலையில் தாங்கி, அதன் பிடியிலிருந்து மூதாட்டியை விடுவித்தனர்.
மலைப்பாம்பின் பல கடிகளுக்கு உள்ளான அந்த பெண், அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தாய்லாந்தில் வனவிலங்குகளுக்கு அருகில் வாழ்வதால் ஏற்படும் ஆபத்துகளை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |