மூட்டைப்பூச்சி தொல்லையால் விமானம் ரத்து: குவாண்டாஸ் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு
மூட்டைப்பூச்சி தொல்லை காரணமாக குவாண்டாஸ் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மூட்டைப்பூச்சி தொல்லையால் விமானம் ரத்து
விமானத்திற்குள் மூட்டைப்பூச்சி தொல்லை அதிகரித்ததை தொடர்ந்து இத்தாலியில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு பறக்க இருந்த குவாண்டாஸ்(Qantas) நிறுவனத்தின் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பெர்த்தில் இருந்து ரோம் நகருக்கான 17 மணி நேர பயணத்தின் போது பயணிகளை மூட்டைப்பூச்சி கடித்ததை தொடர்ந்து குவாண்டாஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

எகானமி வகுப்பில் பயணித்த பலர் பூச்சிக்கடி தொடர்பான புகாரை தெரிவித்துள்ளனர், இதையடுத்து விமான பணிப்பெண்கள் அவர்களுக்கு அரிப்பை கட்டுப்படுத்த ஆண்டிஹிஸ்டமைன் மருந்துகளை வழங்கியுள்ளார்.
விமானம் ரோம் நகரை சென்றடைந்ததும் போயிங் 787 டிரீம்லைனர் (Boeing 787 Dreamliner) விமானத்தை உடனடியாக சேவைகளில் இருந்து நிறுவனம் விலக்கியுள்ளது.
அத்துடன் விமானம் முழுவதும் கிருமி நாசினி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது, இதற்கிடையில் சனிக்கிழமை ரோம் நகரில் இருந்து பெர்த் நகருக்கு திரும்ப வேண்டிய விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது.