வெறும் 17 நொடிகளில் பெரும் விபத்தில் இருந்து தப்பிய விமானம்... பயத்தில் அலறிய பயணிகள்
கத்தார் ஏர்வேஸ் விமானம் ஒன்று கடல் நோக்கி சுமார் 1,000 அடிகள் வரையில் குத்திட்டு பயணித்த நிலையில், சில நொடிகள் இடைவெளியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
பயத்தில் அலறிய பயணிகள்
அந்த போயிங் 787 Dreamliner விமானத்தின் பயணிகள் அனைவரும் பயத்தில் அலறியதுடன், பலர் வாந்தியெடுத்ததாகவும் கூறப்படுகிறது. குறித்த கத்தார் ஏர்வேஸ் விமானமானது தோஹாவின் ஹமத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜனவரி 10ம் திகதி நள்ளிரவு 2 மணிக்கு டென்மார்க் புறப்பட்டு சென்றது.
Image: FLIGHTRADAR24
இந்த நிலையில், அந்த விமானத்தின் முதனமை விமானி தனது துணை விமானியின் தவறை கவனித்து சமயோசிதமாக செயல்பட்டு, விமானத்தை மேலே எழுப்பிய பின்னரே விமானம் பேரழிவைத் தவிர்த்தது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுமார் 70 நொடிகள் விமானம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது எனவும், சுமார் 1,000 அடி அளவுக்கு கடல் மீது பாய்ந்தது எனவும் தெரியவந்துள்ளது. பயணிகள் மொத்த பேருகளும் அலறியதுடன், சிலர் பயத்தில் வாந்தியெடுத்துள்ளனர்.
அடுத்த 17 நொடிகளில் விபத்தில் சிக்கலாம் என்ற நிலையில், விமானி சாமர்த்தியமாக சமாளித்துள்ளார் என்றே தெரிவிக்கின்றனர். விமானம் அடுத்த ஒரு சில நிமிடங்களில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், பயணிகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து விளக்கப்படவில்லை.
17 நொடிகளில் விபத்தில் சிக்கலாம்
ஆனால் விமான ஊழியர்கள் பயணிகளை சமாதானப்படுத்தும் வகையில், மோசமான காலநிலையில் நாம் சிக்கியிருந்தோம் என மட்டும் கூறியுள்ளனர். அவர்களுக்கும் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாமல் போயிருக்கலாம், இருப்பினும், பயணிகளை அமைதிப்படுத்தும் நோக்கில் அவர்கள் அவ்வாறு கூறினர் என நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
@Shutterstock
இந்த விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் என கத்தார் ஏர்வேஸ் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. சம்பவத்தின் போது கடலில் இருந்து சுமார் 850 அடி உயரத்தில் வைத்து தான் விமானி துணை விமானியின் தவறை உணர்ந்துள்ளார்.
அடுத்த 17 நொடிகளில் விமானம் விபத்தில் சிக்கலாம் என்ற நிலையில், விமானி துரிதமாக செயல்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.