ஈரான் தாக்குதல்... தேசிய அவசர கால எச்சரிக்கை விடுத்துள்ள நாடு
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாடு பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள் மீது தொடர்ந்து தாக்குதல்களைத் மேற்கொண்டுவருகிறது.
அவ்வகையில், கத்தார் நாட்டின் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதால், அந்நாடு தன் குடிமக்களுக்கு தேசிய அவசர கால எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
தேசிய அவசர கால எச்சரிக்கை விடுத்துள்ள கத்தார்
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான், பிப்ரவரி மாதம் 28ஆம் திகதி, கத்தார் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசித் தாக்கியது.
அதைத்தொடர்ந்து, மார்ச் மாதம் 2ஆம் திகதி, மீண்டும் கத்தாரை நோக்கி ஏவுகணைகளை வீசியது ஈரான்.

குறிப்பாக, கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ தளமான Al Udeid விமான தளம் மற்றும் Ras Laffan Industrial Cityயில் அமைந்துள்ள முக்கிய எரிவாயு மையம் ஆகியவற்றைக் குறிவைத்து தாக்கியது ஈரான்.
அதைத்தொடர்ந்து எரிவாயு உற்பத்தியை நிறுத்தியதுடன், எரிவாயு விநியோகத்தையும் குறைத்தது கத்தார்.
அதன் காரணமாக, உலக நாடுகள் பலவற்றில் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன.
இந்நிலையில், இன்று மீண்டும் ஈரான் ஏவிய ஏவுகணைகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள கத்தார் உள்துறை அமைச்சகம், தன் குடிமக்களுக்கு தேசிய அவசர கால எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
تعلن وزارة الدفاع القطرية عن تصدي القوات المسلحة لهجمة صاروخية استهدفت دولة قطر.
— وزارة الدفاع - دولة قطر (@MOD_Qatar) March 11, 2026
The Ministry of Defense of State of Qatar announces that armed forces intercepted missile attack which targeted State of Qatar. pic.twitter.com/KbPSSTSS3o
அந்த எச்சரிக்கையில், பாதுகாப்பு அச்சுறுத்தல் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள கத்தார் அரசு, மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறும், வெளியே செல்வதையும், ஜன்னல்களுக்கு அருகில் நிற்பதையும் திறந்த வெளிகளுக்கு செல்வதையும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |