LNG-யைத் தொடர்ந்து யூரியா, மெத்தனால் உற்பத்தியை நிறுத்திய கத்தார்: ஐரோப்பாவில் எரிவாயு விலை உயர்வு
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தொடர்ந்து கத்தார் எனர்ஜி நிறுவனம் எல்என்ஜி உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் பதற்றம்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதலை தொடர்ந்த பிறகு மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் பதிலடி தாக்குதலை தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் போன்ற நாடுகளின் பதற்றமான சூழ்நிலை அதிகரித்துள்ளது.

மோதல் தொடங்கியதில் இது இதுவரை கத்தார் வான்பரப்பை நோக்கி கிட்டத்தட்ட 3 குரூஸ் ஏவுகணைகள், 101 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 39 ஆளில்லா கொலைக்கார ட்ரோன்கள் ஆகியவை ஏவப்பட்டு இருப்பதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
LNG உற்பத்தி நிறுத்தம்
கத்தாரின் மீது ஈரான் தாக்குதலை முன்னெடுத்து வருவதை முன்னிட்டு கத்தார் எனர்ஜி நிறுவனம் முன்னதாக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் ஏற்கனவே பல ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு விலை 54% வரை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ராஸ் லஃபான் மற்றும் மெசைட் ஆகிய பகுதிகளில் உள்ள எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உடன் சேர்த்து அதனுடன் தொடர்புடைய முக்கிய தயாரிப்புகளான யூரியா, பாலிமர்கள், மெத்தனால், அலுமினியம் ஆகியவற்றின் உற்பத்தியையும் நிறுத்துவதாக கத்தார் எனர்ஜி(Qatar Energy) நிறுவனம் அறிவித்துள்ளது.
கத்தார் அரசு வெளியிட்ட தகவலில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் சேதங்களை மதிப்பிடுவதற்காக உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
2022ம் ஆண்டு உக்ரைன் போர் தொடக்கத்திற்கு பிறகு தற்போது ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |