அப்படி நடந்தால்... ஐரோப்பாவுக்கு எரிவாயு விற்பனை கிடையாது: கத்தார் சபதம்
கண்காணிப்பு சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கும் நடவடிக்கையை ஐரோப்பா உறுப்பு நாடுகள் கடுமையாக அமுல்படுத்தினால், கத்தார் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எரிவாயு அனுப்புவதை நிறுத்தும் என எரிசக்தி அமைச்சர் Saad al-Kaabi தெரிவித்துள்ளார்.
வருவாயில் 5 சதவீதம்
ஐரோப்பிய ஒன்றிய சட்டமான CSDDD இந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில், ஐரோப்பிய ஒன்றியத்தில் செயல்படும் பெரிய நிறுவனங்கள் தங்கள் விநியோக அமைப்புகளில் கட்டாய உழைப்பைப் பயன்படுத்துகின்றனவா அல்லது சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகின்றனவா என்பதைச் சரிபார்த்து, அவ்வாறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடபப்ட்டுள்ளது.
அவ்வாறு தவறிழைத்தது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதமாக உலகளாவிய வருவாயில் 5 சதவீதம் வரை செலுத்த நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த நிலையிலேயே, அமைச்சர் Kaabi ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த சட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐரோப்பாவுக்கு தொழில் முன்னெடுப்பதால் உருவான வருவாயில் 5 சதவிகிதத்தை தாம் இழக்க நேரிடும் என்றால், ஐரோப்பாவுக்கு ஏன் தொழில் செய்ய வேண்டும் என்ற கேள்வியை Kaabi எழுப்பியுள்ளார்.
LNG ஏற்றுமதியாளர்
கத்தார் எரிவாயு விற்பனை செய்து திரட்டப்படும் 5 சதவிகித வருவாய் என்பது கத்தாருக்கான வருவாய். அது கத்தார் மக்களுக்கான வருவாய், அப்படியான வருவாயை கத்தார் ஒருபோதும் இழக்க தயாராக இல்லை என Kaabi தெரிவித்துள்ளார்.
மேலும், கண்காணிப்பு சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாக மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். உலகின் முன்னணி LNG ஏற்றுமதியாளர்களில் முன்வரிசையில் கத்தார் உள்ளது.
அமெரிக்கா தற்போது முந்தும் நிலையில் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் கடும் போட்டியை கத்தார் எதிர்கொண்டு வருகிறது. தற்போதைய 77 மில்லியனில் இருந்து 2027 ஆம் ஆண்டுக்குள் அதன் திரவமாக்கல் திறனை ஆண்டுக்கு 142 மில்லியன் டன்களாக விரிவுபடுத்த கத்தார் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |