கத்தார் உலகக் கோப்பை... பீதியை கிளப்பும் மரண எண்ணிக்கை: ஒப்புக்கொண்ட அதிகாரி
கத்தாரில் உலகக் கோப்பை கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களில் சுமார் 500 பேர்கள் வரையில் இறந்திருக்கலாம் என முதன்முறையாக அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளது.
பல மடங்கு அதிகம்
இதுவரை வெளியிட்டு வந்த தரவுகளை விட பல மடங்கு அதிகம் என்றே, தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல் சுட்டிக்காட்டியுள்ளது. கத்தாரின் முக்கிய அமைப்பின் பொது செயலாளராக செயல்பட்டுவரும் ஹசன் அல் தவாதி என்பவரே, குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவிற்காக சுமார் 200 பில்லியன் டொலர் மதிப்பிலான 8 விளையாட்டு அரங்கங்கள், ரயில் சேவைகள், புதிய உள்கட்டமைப்புகள், தங்கும் விடுதிகள் என கட்டி முடிக்கப்பட்டன.
மொத்த கட்டுமான பணிகளும் இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாட்டு புலம்பெயர் தொழிலாளர்களே முன்னெடுத்தனர். இவர்களில் ஆயிரம் பேர்கள் வரையில் இறந்திருக்கலாம் என மனித உரிமைகள் ஆர்வலர்கள் அம்பலப்படுத்திய நிலையில்,
நற்பெயருக்கு களங்கம்
கத்தார் மொத்தமாக மறுத்து வந்துள்ளதுடன், உண்மையான எண்ணிக்கையை வெளிவிடாமல், கத்தாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் திட்டமிட்ட சதி எனவும் மொத்தமாக 40 பேர்கள் மட்டுமே இறந்துள்ளதாகவும் கூறி வந்தது. .
தற்போது முதன்முறையாக பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு ஹசன் அல் தவாதி பதிலளிக்கையில், 400 முதல் 500 பேர்கள் வரையில் இறந்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
@file
மேலும், தம்மிடம் முழுமையான தரவுகள் இந்த விவகாரம் தொடர்பில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2010ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை முன்னெடுக்கும் வாய்ப்பை கத்தாருக்கு வழங்கப்பட்ட பின்னர், அந்த நாடு அதுவரையான வேலைவாய்ப்பு நடைமுறைகளை மாற்றியமைக்க சில நடவடிக்கைகளை எடுத்தது.
இறப்பு எண்ணிக்கை
மேலும், மாதம் குறைந்தது 275 டோலர் ஊதியம் எனவும், உணவு மற்றும் தங்கும் வசதிகளும் ஏற்படுத்தியது. மட்டுமின்றி, கட்டுமான பணிகளின் போது இறப்பு எண்ணிக்கையை குறைக்க பாதுகாப்பு விதிகளிலும் மாற்றத்தை கொண்டுவந்தது.
இருப்பினும், உரிய நேரத்தில் ஊழியர்களுக்கு ஊதியக் கிடைக்க நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஹசன் அல் தவாதி வெளிப்படுத்தியுள்ள இந்த தகவல் மீண்டும் ஒருமுறை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.