கத்தாரில் 19 ஆண்டுகளாக வசிக்கும் தமிழர்: லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்
கத்தாரில் வேலை பார்த்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வினோத் என்பவர் பிக் டிக்கெட் லொட்டரில் பரிசு வென்றார்.
பிக் டிக்கெட் லொட்டரி
தமிழ்நாட்டைச் சேர்ந்த வினோத் அன்பரசன் என்ற 38 வயது நபர், கத்தார் நாட்டில் Electrical மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.
19 ஆண்டுகளாக அங்கு வசித்து வரும் வினோத், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் பிக் டிக்கெட் லொட்டரி வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் அவர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிக்காக காத்திருந்தார்.
இந்த நிலையில் பிப்ரவரி 1ஆம் திகதி அவருக்கு பரிசு விழுந்துள்ளது. 50,000 திர்ஹாம் என்ற அந்த பரிசுத்தொகையானது இந்திய மதிப்பில் ரூ.12 லட்சம் ஆகும்.
பரிசு வென்ற தமிழர்
இந்த பரிசுத்தொகையைக் கொண்டு தனது மகளுக்கு ஒருபோதும் மறக்க முடியாத ஒன்றாக மாற்ற அவர் விரும்புகிறார்.
லொட்டரியில் வென்றது குறித்து பேசிய வினோத் அன்பரசன், "முதலில் எனக்கு அழைப்பு வந்தபோது, என்னால் அதை உண்மையாகவே நம்ப முடியவில்லை, சற்று தயங்கினேன். ஆனால், நேரலை ஒளிபரப்பில் என் பெயர் தோன்றியதைக் கண்டதும், அது உண்மை என்று தெரிந்துகொண்டேன். அப்போதுதான் அந்த வெற்றி எனக்கு முழுமையாக புரிந்தது" என தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |