தொடங்கும் கோலாகல விழா... கட்டார் உருவாக்கியுள்ள மிருகத்தனமான அமைப்பு: இனி தப்ப முடியாது
வளைகுடா நாடு ஒன்றில் முதன்முறையாக கால்பந்து உலக கிண்ணம் போட்டிகள்
அத்துமீறும் ரசிகர்களை அடக்க மிருகத்தனமான அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளதாக தகவல்
கட்டாரில் கால்பந்து திருவிழா தொடங்கவிருக்கும் நிலையில், அத்துமீறும் ரசிகர்களை அடக்க மிருகத்தனமான அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வளைகுடா நாடு ஒன்றில் முதன்முறையாக கால்பந்து உலக கிண்ணம் போட்டிகள் முன்னெடுக்கப்பட இருக்கும் நிலையில், உலகம் முழுவதிலுமிருந்து சிறப்புப் படைகளை களமிறக்கி, கட்டுக்கோப்பான ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது.
Credit: twitter
எதிர்வரும் 20ம் திகதி தொடங்கி டிசம்பர் 18ம் திகதி வரையில் நடக்கும் இந்த கால்பந்து விழாவுக்கு சுமார் 1.2 மில்லியன் பார்வையாளர்கள் கட்டார் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே அமெரிக்கா, பிரித்தானியா, துருக்கி, தென் கொரியா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த காவல் துறையினர் இணைந்த சிறப்புப் படை ஒன்றை கட்டார் உருவாக்கியுள்ளது.
@getty
இவர்கள் அனைவரும் 8 விளையாட்டு அரங்கங்கள் மற்றும் 32 அணிகள் தங்கியிருக்கும் ஹொட்டல்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபடுவார்கள். இதில் கலவரங்களை ஒடுக்குவதில் பெயர்பெற்ற பிரான்ஸ் பொலிசார் மற்றும் துருக்கியின் இரக்கமற்ற சிறப்புப் படைகளும் இடம்பெற்றுள்ளன.
பொதுவாக தீவிரவாத குழுக்களுக்கு எதிராகவே துருக்கியின் Polis-Özel-Harekat படை களமிறக்கப்படுவதுண்டு. குர்து பகுதிகளில் மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவத்தில் குறித்த Polis-Özel-Harekat கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
@AP
இந்த படையினருக்கு பெண்கள் அணியும் தனியாக உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 3,000 சிறப்புப் படையினர் கட்டாரில் களமிறக்கப்பட்டுள்ளனர். தொடர்புடைய சிறப்புப் படைகள் கட்டாரில் முன்னெடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கும் சேதங்களுக்கும் பொறுப்பு ஏற்காது என்றே கூறப்படுகிறது.
பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் வாடகை கொலையாளிகளாக துரிக்கியின் சிறப்புப் படைகளை பயன்படுத்துவதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
பிரான்ஸ் நாடும் தங்களின் மிக சிறப்பான குழுவை கட்டாரில் களமிறக்கியுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய், பயங்கரவாத தடுப்பு குழு, மேலும் கால்பந்து விளையாட்டின் போது அத்துமீறுவோரை அடக்கும் சிறப்பு குழுவினர் என 191 பேர்கள் களமிறங்கியுள்ளனர்.
@getty
பயங்கரவாத தடுப்பு படையினர் 100 பேர், வெடிகுண்டு நிபுணர்கள் 50, மோப்ப நாய்கள் 80 மற்றும் கலவரத்தின் போது பயன்படுத்தப்படும் நாய்கள் என துருக்கியும் கட்டாருக்கு உதவுகிறது.
மட்டுமின்றி, கட்டார் பொலிசார் 800 பேர்களுக்கு துருக்கி பயிற்சியும் அளித்துள்ளது. இவர்களுடன் பாகிஸ்தான், தென் கொரியா, மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் சிறப்புப் படைகள் களமிறங்குகின்றன.