போட்டிகள் விருந்தாக அமைந்தது! கத்தாரில் கால்பந்து உலக கோப்பையை நேரில் ரசிக்கும் தமிழர்கள் உற்சாகம்
கத்தாரில் 2022 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் நிலையில் அதை உற்சாகமாக நேரில் கண்டுகளிக்கும் தமிழ் ரசிகர்கள் சிலர் அது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.
கத்தாரில் உலக கோப்பையை ரசிக்கும் தமிழர்கள்
இது தொடர்பில் ரசிகை ஒருவர் கூறுகையில், கத்தாரில் உலக கோப்பை போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. உருகுவே - தென் கொரியா மோதிய போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
இரு அணிகளும் இறுதிவரையில் கோல் அடிக்காமல் ஆட்டம் டிராவில் முடிந்தாலும் போட்டியானது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது என கூறினார்.
thanthi
கலக்கிய சுவிட்சர்லாந்து அணி
திருமுருகன் நந்தன் என்ற ரசிகர் கூறுகையில், சுவிர்சர்லாந்து மற்றும் கேமரூன் இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இதில் இரு அணிகளும் சமமான பங்களிப்பை கொடுத்தனர், இருந்த போதிலும் சுவிட்சர்லாந்து அணி வீரர்கள் ஒரு கோல் போட்டார்கள்.
ஆனால் கேமரூன் அணியால் அது முடியவில்லை, ஆட்ட இறுதியில் சுவிட்சர்லாந்து அணி 1 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது என கூறியுள்ளார்.
Reuters Photo