கத்தார் உலக கோப்பை மைதானத்தில் மதுவை மறைத்து எடுத்து வந்த ரசிகர்! வசமாக சிக்கிய வீடியோ
கத்தார் உலக கோப்பையின் போது ரசிகர் ஒருவர் மதுவை உள்ளே எடுத்து செல்ல புதிய வழியில் முயற்சித்த போதிலும் வசமாக சிக்கியுள்ளார்.
கத்தாரில் நடக்கும் கால்பந்து உலக கோப்பை
கத்தாரில் 2022 கால்பந்து உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உலக கோப்பை மைதானங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய சர்வதேச கால்பந்து சங்கம் (FIFA) தடை விதித்துள்ளது.
இந்த நிலையில் மெக்சிகோ ரசிகர் ஒருவர் கத்தார் மைதானத்தில் மதுவை பைனாகுலரில் மறைத்து கொண்டு பதுங்கிக் எடுத்து செல்ல முயன்றார். இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.
A Mexico fan tried to to sneak in alcohol in binoculars and still got caught ??♂️pic.twitter.com/2dpNqIqRf9
— Troll Football (@TrollFootball) November 24, 2022
கண்டுபிடித்த அதிகாரி
அதில், பாதுகாப்பு அதிகாரி ரசிகருடன் பேசுவதைக் காணலாம், அந்த அதிகாரி தனது கண்களில் பைனாகுலரை வைத்து பார்த்த நிலையில் ரசிகரின் தில்லாலங்கடி வேலையை கண்டுபிடித்தார்.
ஏற்கனவே பீர் விற்பனை தடை போன்ற கட்டுப்பாடுகளால் ரசிகர்கள் அதிருப்தியடைந்ததாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.