கத்தார் கால்பந்து உலக கோப்பையில் ஆடையை கழட்டியதற்காக தண்டனை பெற்ற இளம்பெண்?
FIFA உலக கோப்பை கால்பந்து நடக்கும் கத்தாரில் பெண் ரசிகை ஒருவர் பொதுவெளியில் இழிவான செயலில் ஈடுபட்டதற்காக கைதானார் என ஒரு தகவல் பரவிய நிலையில் அதன் உண்மை தன்மை தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து ரசிகை
சமீபத்தில் உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து - ஈரான் மோதிய போட்டி நடந்தது. அந்த சமயத்தில் கத்தாருக்கு வந்த இங்கிலாந்து ரசிகை ஒருவர் ஆர்வ மிகுதியில் தனது உடையை கழட்டினார் என ஒரு வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
மேலும் FIFA விதிமுறைகளை மீறியதற்காக கத்தார் சிறையில் அடைக்கப்பட்ட முதல் பெண்மணியாக அவர் இருக்கிறார் எனவும் செய்தி பரப்பப்பட்டது.
Agence France-Presse via Getty Images
வீடியோவின் உண்மை தன்மை
ஆனால் அந்த வீடியோ FIFA உலக கோப்பை கால்பந்து தொடரில் எடுக்கப்பட்டது கிடையாது என தெரியவந்துள்ளது.
அதன்படி, குறித்த வீடியோ 2020 UEFA Euro கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி இத்தாலியிடம் தோற்ற போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.
மேலும் 2022 கத்தார் உலக கோப்பையில் பயன்படுத்தப்படும் ஜெர்ச்சிக்கும் அந்த வீடியோவில் உள்ள ஜெர்சிக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதும் உறுதியாகியுள்ளது.