4 முறை சாம்பியனான ஜேர்மனிக்கு காத்திருந்த அதிர்ச்சி: ஜப்பான் அபார வெற்றி!
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் நான்கு முறை உலக சாம்பியனான ஜேர்மனி அணியை வீழ்த்தி ஜப்பான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆதிக்கம் காட்டிய ஜேர்மன்
உலக கோப்பை கால்பந்து தொடரில் “ஈ” பிரிவில் நடைபெறும் இன்றைய போட்டியில் நான்கு முறை சாம்பியனான ஜேர்மன் அணியுடன் ஜப்பான் அணி மோதியது.
கலிபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆட்டத்தின் 33 வது நிமிடத்தில் ஜேர்மன் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அந்த அணியின் இல்கே குண்டோகன் கோல் அடித்து அசத்தினார்.
The introduction of Tomiyasu and Minamino made a great impact for Japan, with German making a great mistake to substitute Muller and Gundogan.
— J.o.s.h♥️⚽ (@JosephGrace256) November 23, 2022
German Vs Japan Highlights? pic.twitter.com/pUWqviOHJl
இந்த கோல் வித்தியாசத்தை சமன் செய்ய ஜப்பான் அணி வீரர்களின் கடுமையான முயற்சி வீண்போகவே முதல் பாதியில் ஜேர்மன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பிடித்தது.
ஜேர்மன் அணிக்கு அதிர்ச்சி
இதையடுத்து இரண்டாவது பாதியில் முன்னிலை பெற இரு அணி வீரர்களும் தொடர்ந்து போராட ஆட்டம் விறுவிறுப்படைந்தது.
இரண்டாவது பாதியின் 75 வது நிமிடத்தில் ரிஸ்து டோன் மற்றும் 83 வது நிமிடத்தில் டகுமா ஆசானோ ஆகிய இரண்டு ஜப்பான் வீரர்கள் அதிரடியாக கோல்களை அடிக்கவே ஜேர்மனி அணி அதிர்ச்சியடைந்தது.
74' Germany 1-0 Japan
— B/R Football (@brfootball) November 23, 2022
83' Germany 1-2 Japan
? JAPAN WITH THE COMEBACK ? pic.twitter.com/RDJthRTMB8
இதை எப்படியாவது சமன் செய்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் பல முயற்சிகளை மேற்கொண்ட ஜேர்மன் அணியால் பதில் கோலை திருப்பி அடிக்க முடியாததால் ஆட்டத்தின் முடிவில் நான்கு முறை சாம்பியன் அணியான ஜேர்மன் ஜப்பான் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
நேற்று நடைபெற்ற ஆட்டத்திலும் அர்ஜென்டினா அணியை சவுதி அரேபியா அணி இதை போன்று வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ANOTHER World Cup shock! ?
— Sky Sports News (@SkySportsNews) November 23, 2022
FT: Germany 1-2 Japan ⏱️ pic.twitter.com/vnZhaQwEO4