உலகக் கோப்பை தோல்வியை தாங்காமல் கண்ணீர் விட்டு அழுத ரொனால்டோ! மனம் உடைந்த ரசிகர்கள்.. வீடியோ
கத்தார் உலகக் கோப்பை தொடரில் இருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியதையடுத்து அந்த அதிர்ச்சி தாங்காமல் ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுத வீடியோ வெளியாகியுள்ளது.
போர்ச்சுகல் - மொராக்கோ
நேற்று நடந்த 3-வது கால்இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் போர்ச்சுகல் அணி, 22-வது இடத்தில் உள்ள மொராக்கோவை சந்தித்தது.
கடந்த ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடக்கத்தில் களம் இறக்கப்படவில்லை. கேப்டன் பொறுப்பை பெப்பே கவனித்தார்.
I can’t ?? #Ronaldo? pic.twitter.com/4mqSICsVbj
— Madrid (@Nachoista1) December 10, 2022
ரொனால்டோ கண்ணீர்
இந்த ஆட்டத்தின் முடிவில் மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணிக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறியது.
இந்த அதிர்ச்சி தோல்வியால் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதார். இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் மனம் சுக்குநூறாக உடைந்தது.
அழுதபடி ரொனால்டோ இருந்த நிலையில் எதிரணி வீரர்கள் கூட அவர் தோள் மீது கைவைத்து தேற்றியதை காண முடிந்தது.