பிரான்ஸ் ஜனாதிபதியை தனியாக சந்தித்த கனேடிய மாகாணமொன்றின் தலைவர்
பொதுவாக, ஒரு நாட்டின் தலைவர் மற்றொரு நாட்டின் தலைவரை சந்திப்பது, ஒரு நாட்டின் தலைவர் மற்றொரு நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வது குறித்த செய்திகள்தான் அதிகம் கவனம் ஈர்க்கும் வகையில் தலைப்புச் செய்தியாகும்.
ஆனால், கனடாவில், ஒரு மாகாணத்தின் பிரீமியர், பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்துள்ள செய்தி தலைப்புச் செய்தியாகியுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்த கியூபெக் பிரீமியர்
ஆம், கனடாவின் 10 மாகாணங்களில் ஒன்றான கியூபெக் மாகாணத்தின் பிரீமியரான கிறிஸ்டைன் (Christine Fréchette), பிரான்ஸ் சென்று, பிரான்ஸ் ஜனாதிபதியையும் பிரான்ஸ் பிரதமரையும் சந்தித்துள்ளார்.

அது குறித்து ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானும், கனேடிய தலைவர் ஒருவர் பிரான்ஸ் வந்துள்ளார் என்று கூறவில்லை.
மாறாக, கியூபெக்குக்கு நல்வரவு, ஆராய்ச்சி, AI முதலான பல விடயங்களில் பிரான்சுக்கு கியூபெக் உதவக்கூடும் என்றுதான் கூறினார்.
விடமாட்டோம்... கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணத்தை தனியாக பிரிக்கும் விவகாரம்: அடுத்த கட்ட நடவடிக்கை
இப்படி ஒரு கனேடிய மாகாணத்தை தனி நாடு போல நடத்துவதற்கான காரணம் என்னவென்றால், சில தனித்தன்மை வாய்ந்த உரிமைகள் கொண்ட கனேடிய மாகாணங்களில், கியூபெக்கும் ஒன்றாகும்.

கியூபெக்குக்கு, சுதந்திரமான சர்வதேச தூதரக வலையமைப்பு உள்ளது. அது வெளிநாட்டு முதலீடு, சுற்றுலா மற்றும் உள்ளூர் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல் போன்ற விடயங்களில் தன் முடிவை சுதந்திரமாக எடுக்கும் உரிமை கொண்டுள்ளது.
அத்துடன், பிரெஞ்சு மொழி அதிகம் பேசும் மக்களைக் கொண்டுள்ளதால், கியூபெக் மாகாணம் பிரான்சுடன் ஆழ்ந்த தூதரக உறவுகளையும் கொண்டுள்ளது.
ஆகவேதான் கியூபெக்கின் பிரீமியர் பிரான்ஸ் சென்ற விடயம், ஒரு நாட்டின் தலைவர் மற்றொரு நாட்டுக்குச் சென்றதற்கு சமமான அளவில் கவனம் ஈர்க்கும் செய்தியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |