கனடாவின் க்யூபெக் மாநிலத்தில் புதிய Skilled Worker Program தொடக்கம்
கனடாவின் க்யூபெக் மாநிலத்தின் திறமையாளர் தேர்வு திட்டம் (PSTQ), பல மாதங்களுக்கு பிறகு ஜூலை மாதம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்தத் திட்டம், முன்னதாக அக்டோபர் 2024-இல் நிறுத்தப்பட்ட Regular Skilled Worker Program (PRTQ)-ஐ மாற்றி, நவம்பர் 29, 2024-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அறிமுகம் செய்தவுடன் அது இடைநிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது, Quebec அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம், புதிய தேர்வு அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு முறைமையுடன் PSTQ மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

இந்த திட்டம் நான்கு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது:
- அதிக தகுதி வாய்ந்த மற்றும் நிபுணத்துவம் (qualified and specialized skills)
- இடைநிலை மற்றும் கைத்திறன் வேலைகள் (intermediate and manual skills)
- ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட தொழில்கள் (regulated professions)
- தனித்திறமை உள்ளவர்கள் (exceptional talent)
தேர்வுக்கான முக்கியக் காரணிகள்:
- கல்வித் தகுதி
- பயிற்சி
- வேலை அனுபவம்
- க்யூபெக் மாநிலத்தில் கல்வி பெற்றல் அல்லது வேலை செய்த அனுபவம்
- பிரஞ்சு மொழிப் புலமை (முக்கியமாக முதல் மூன்று பிரிவுகளுக்குத் தேவையானவை)

புதிய தேர்வு முறைப்படி, விண்ணப்பதாரர்கள் Arrima இணைய தளத்தில் தங்கள் Declaration of Interest (DOI) சமர்ப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே DOI சமர்ப்பித்தவர்கள், நவம்பர் 29, 2024-க்கு பிந்தைய புதிய அளவீடுகளை பயன்படுத்தி தங்கள் சுயவிவரங்களை புதுப்பிக்க வேண்டியிருக்கிறது.
முதற்கட்டமாக ஜூலை மாதத்தில், க்யூபெக் மாநிலத்தில் வாழும், பிரஞ்சு மொழியில் தேர்ச்சி பெற்ற மற்றும் வேலைவாய்ப்பு தேவை உள்ள துறைகளில் பணியாற்றும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |