ஹாலோவீன் பண்டிகையின்போது குழந்தை சாப்பிட்ட சொக்லேட்: தாய் கூறும் எச்சரிக்கை செய்தி
A mother's warning after her son was hospitalized after eating chocolate he received on Halloween that contained cannabis: ஹாலோவீன் பண்டிகையின்போது யாரோ கொடுத்த சொக்லேட்டில் கஞ்சா கலந்திருந்ததால் தன் பிள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டது தொடர்பில் ஒரு தாய் எச்சரித்துள்ளார்.
கனடாவில், ஹாலோவீன் பண்டிகையின்போது யாரோ கொடுத்த சொக்லேட்டை சாப்பிட்ட குழந்தை ஒன்றிற்கு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சொக்லேட் சாப்பிட்ட குழந்தைக்கு ஏற்பட்ட நிலைமை
கியூபெக்கில் வாழும் ரெபேக்காவின் (Rebeka Lefebvre), மகனான மைலன் (Mylan, 4) என்னும் சிறுவனுக்கு, ஹாலோவீன் பண்டிகையின்போது யாரோ கொடுத்த சொக்லேட்டை சாப்பிட்டபின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அவனை ரெபேக்கா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மைலன், பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளான்.
அப்போது, ஆய்வகப் பரிசோதனைகளில், மைலன் உடலில் கஞ்சாவின் உட்பொருள் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது.
ஹாலோவீன் பண்டிகையின்போது தன் மகனுக்கு யாரோ கொடுத்த சொக்லேட்டில் கஞ்சா கலந்திருக்கலாம் என நம்பும் ரெபேக்கா, இப்படியெல்லாம் கூட செய்வார்களா என வியக்கிறார்.

பொலிசார் இந்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு இதுபோல் தெரியாத நபர்களால் கொடுக்கப்படும் சொக்லேட்கள் குறித்து கவனமாக இருக்கவேண்டும் என எச்சரிக்கிறார் ரெபேக்கா.
மைலனைப் பொருத்தவரை, அவன் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டான், அவன் நலமடைந்துவருவதாக ரெபேக்கா தெரிவிக்கிறார்.