கேக் ஆர்டர் செய்த காமராஜர்...இளவரசர் ஆண்ட்ரூ-வின் முதல் பிறந்தநாளை சென்னையில் கொண்டாடிய பிரித்தானிய மகாராணி!
பிரித்தானிய மகாராணியாக இரண்டாம் எலிசபெத் மூடி சூடிய பிறகு 1961ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
சென்னையில் உள்ள ராஜாஜி அரங்கில் அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் தலைமையில் இளவரசர் ஆண்ட்ரூ-விற்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.
பிரித்தானிய மகாராணி எலிசபெத். தமிழக முதல்வர் காமராஜரின் முன்னிலையில் 1961ம் ஆண்டு பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது மகன் ஆண்ட்ரூ-வின் முதல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்வு தமிழக வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
பிரித்தானியாவின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத், 1952ம் ஆண்டு தனது 25 வது வயதில் அரியணை ஏறினார், சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த மகாராணி இரண்டாம் எலிசபெத், தனது 96 வயதில் நேற்று வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் இரண்டாம் எலிசபெத், பிரித்தானியாவின் மகாராணியாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக 1961ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இவ்வாறு பிரித்தானிய மகாராணியின் சென்னை சுற்றுப் பயணத்தின் போது அவரது மகன் ஆண்ட்ரூ-வின் பிறந்தநாளையும் எதிர்கொண்ட போது, சென்னை மாகாணத்தின் அப்போதைய முதல்வர் காமராஜர், சென்னை ராஜாஜி அரங்கில் இளவரசர் ஆண்ட்ரூ-வின் பிறந்த கொண்டாங்களுக்காக 1961-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி ஏற்பாடு செய்து இருந்தார்.
இதற்காக சென்னையின் புகழ்பெற்ற பெற்ற Bosotto Bros பேக்கரியில் முதலமைச்சர் காமராஜர் கேக் ஆர்டர் செய்ய கொடுத்துள்ளார்.
இவ்வாறு தமிழகத்தின் முன்னாள் முதல்வரால் ராஜாஜி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இளவரசர் ஆண்ட்ரூ-வின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மகாராணி இரண்டாம் எலிசபெத் கேக் ஊட்டி மகிழ்ந்து உள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு: பிரித்தானியாவில் இன்று நடைபெறும் நிகழ்வுகளின் பட்டியல்!
மேலும் இந்திய பயணம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ராணி எலிசபெத் பேசுகையில் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரை பற்றி நெகிழ்வாக பேசியதாகவும் தகவல்கள் சொல்லப்படுவது உண்டு.