பிரித்தானிய மன்னரின் மனைவி என்ற உயர் அந்தஸ்தை பெற்றும் ஒரு விடயத்தில் இன்னும் மாறாத கமீலா! சுவாரசிய தகவல்
சார்லஸ் மனைவி கமீலா விரும்பி உண்ணும் ஒரு உணவின் விலை மிகக்குறைவு என ஆச்சரிய தகவல்.
சிறந்த உணவு பொருட்களைப் பெற்றிருந்தாலும், எளிய உணவை விரும்பி சாப்பிடும் கமீலா.
பிரித்தானிய மன்னரின் மனைவி கமீலாவுக்கு அதிகம் பிடித்த உணவு தொடர்பில் ஒரு ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக பெரிய கோடீஸ்வரர்கள் மற்றும் உலகளவில் பிரபலமானவர்களின் விருப்ப பட்டியலில் உள்ள உணவுகளின் விலை மிக அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் பிரித்தானியாவின் மன்னராக சார்லஸ் பொறுப்பேற்றதன் காரணமாக அவர் மனைவி கமீலா புதிய Queen Consort பதவியை அடைந்துள்ளார்.
இவ்வளவு பெரிய இடத்தில் உள்ள கமீலாவுக்கு மிகவும் பிடித்த உணவு டோஸ்டில் வேகவைத்த பீன்ஸ் தொடர்பான உணவு வகை தான். இந்த உணவு வகை பிரித்தானியாவின் புகழ்பெற்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனமான Asdaவில் கிடைக்கிறது.
cornwalllive
இதன் விலை வெறும் £1.04 தான். உலகின் தலைசிறந்த சமையல்காரர்கள் மற்றும் சிறந்த உணவு பொருட்களைப் பெற்றிருந்தாலும், கமீலா வியக்கத்தக்க வகையில் எளிமையான உணவை தனது விருப்ப உணவாக அடிக்கடி சுவைப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஏனெனில் தற்போது நாட்டின் மன்னரின் மனைவி என்ற அந்தஸ்தை அடைந்தும் அதே உணவை அவர் தொடர்ந்து அடிக்கடி சாப்பிடுவது குறிப்பிடத்தக்கது.