ராணியாரின் உடலுக்கு இறுதி மரியாதை... தடை விதிக்கப்பட்ட முக்கிய நாட்டின் பிரதிநிதிகள்?

China Queen Elizabeth II
By Arbin Sep 16, 2022 02:10 PM GMT
Report

சீனத்து பிரதிநிதிகளை அனுமதிப்பதில்லை என்ற முடிவுக்கு அரசாங்கம் வந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி

ராணியாரின் இறுதிச்சடங்கானது பிரித்தானியாவை பொறுத்தமட்டில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று

ராணியாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வரும் சீனத்து பிரதிநிதிகளை, இறுதி மரியாதை செலுத்த அனுமதிப்பதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் சின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விமர்சித்ததற்காக பல பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சீனாவால் தடை விதிக்கப்பட்ட நிலையில், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவிலிருந்து பிரதிநிதிகளை அழைப்பது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர்.

ராணியாரின் உடலுக்கு இறுதி மரியாதை...  தடை விதிக்கப்பட்ட முக்கிய நாட்டின் பிரதிநிதிகள்? | Queen Elizabeth Final Respect China Banned

@reuters

ஆனால் சின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்கள் எதுவும் நடந்ததில்லை என சீனா கூறி வருகிறது. இந்த நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் சீனத்து பிரதிநிதிகளை அனுமதிப்பதில்லை என்ற முடிவுக்கு அரசாங்கம் வந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், வெளியுறவு அலுவலகத்தின் ஆலோசனைக்குப் பிறகு, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகளே விருந்தினர் பட்டியலை அமைக்கும் என்று கூறியுள்ளார்.

ராணியாரின் உடலுக்கு இறுதி மரியாதை...  தடை விதிக்கப்பட்ட முக்கிய நாட்டின் பிரதிநிதிகள்? | Queen Elizabeth Final Respect China Banned

@reuters

மட்டுமின்றி, தங்களுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்ட நாடுகளின் பிரதிநிதிகளையே பிரித்தானியா அழைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இதுபோன்ற ஒரு தகவல் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

மேலும், ராணியாரின் இறுதிச்சடங்கானது பிரித்தானியாவை பொறுத்தமட்டில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. ராணியார் மீதான மரியாதை நிமித்தமே, வெளிநாட்டு பிரதிநிதிகளை பிரித்தானியா அழைத்துள்ளது என்றார் மாவோ நிங்.

மட்டுமின்றி, பிரித்தானியா இராஜதந்திர நெறிமுறைகளையும் விருந்தினர்களுக்கு முறையான மரியாதையும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராணியாரின் உடலுக்கு இறுதி மரியாதை...  தடை விதிக்கப்பட்ட முக்கிய நாட்டின் பிரதிநிதிகள்? | Queen Elizabeth Final Respect China Banned

@AP

எதிர்வரும் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் ராணியாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உலக நாடுகளில் இருந்து பல தலைவர்கள், ராஜகுடும்ப உறுப்பினர்கள் என வருகைதர உள்ளனர்.

சீனாவின் துணை ஜனாதிபதி Wang Qishan இதில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு, ராணியாருக்கு இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US