மறைந்த ராணியாரின் மொத்த நகைகளும் இனி யாருக்கு சொந்தம்: வெளிவரும் புதிய தகவல்
டயான நினைவாக நகைகளை இளவரசர் வில்லியம் மனைவி கேட் மிடில்டன் அணிவது உண்டு.
பட்டியலில் யார் யாருக்கு எந்த நகைகள் அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கலாம்.
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்திற்கு சொந்தமான அனைத்து நகைகளும் இனி யாருக்கு சொந்தமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்திடம் இருந்த நகைகள் அனைத்தும் பரம்பரையாக கைமாறப்பாட்டு வந்தவையாகும். இந்த நிலையில், தற்போது அவர் காலமானதை அடுத்து, அந்த நகைகள் அனைத்தும் யாருக்கு சொந்தமாகும் என்ற விவாதம் எழுந்துள்ளது.
@getty
இளவரசி டயான மறைந்த பின்னர், அவரது நினைவாக முக்கிய தருணங்களில், டயானாவின் நகைகளை இளவரசர் வில்லியம் மனைவி கேட் மிடில்டன் அணிவது உண்டு. இந்த வாரம், ராணியார் எலிசபெத் நினைவாக, அவரது குறிப்பிட்ட நகைகளை கேட் மிடில்டன், மேகன் மெர்க்கல் மற்றும் மன்னர் சார்லஸின் மனைவி கமிலா ஆகியோர் அணிந்து சிறப்பித்துள்ளனர்.
ராணியாரின் உயில் பல ஆண்டுகளுக்கு வெளியிடப்படாது என்றே கூறப்படுகிறது. ஆனால், தமது நகைகள் தொடர்பில் ராணியார் கண்டிப்பாக பட்டியல் ஒன்றை தயாரித்திருப்பார் என கூறப்படுகிறது.
@getty
மேலும், குறித்த பட்டியலில் யார் யாருக்கு எந்த நகைகள் அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கலாம். அதில், எதிர்காலத்தில் பிரித்தானிய ராணியாக வர வாய்ப்புள்ள கேட் மிடில்டனுக்கும் அளிக்கப்படலாம்.
முன்னர், 1953ல் ராணியார் மேரி காலமான நிலையில், அவருக்கு சொந்தமான நகைகளில் பெரும்பகுதி அவரது பேரப்பிள்ளையான ராணியார் இரண்டாம் எலிசபெத்துக்கு அளிக்கப்பட்டது.
மேலும், அந்த நகைகளை அவர் கடந்த 70 ஆண்டுகளில் முக்கிய தருணங்களில் அணிந்தும் வந்துள்ளார். கடந்த 2002ல் ராணியார் எலிசபெத் மறைந்த பின்னர், அவருக்கு சொந்தமான நகைகளில் பெரும்பகுதி, அவரது மகளான இரண்டாம் எலிசபெத்துக்கு அளிக்கப்பட்டது.
@getty
இந்த நிலையில், ராணியார் இரண்டாம் எலிசபெத் உயிருடன் இருக்கும் போதே குறிப்பிட்ட நகைகளை கேட் மிடில்டன், கமிலா, சோஃபி, மறைந்த இளவரசி டயானா ஆகியோருக்கும் மேகன் மெர்க்கலுக்கும் பரிசாக வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், பரம்பரையாக நகைகள் கைமாறப்பட்டு வருவதால், ராணியாரின் பெரும்பாலான நகைகள் சார்லஸ் மன்னருக்கு அளிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
அவர் அந்த நகைகளை தமது குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசளிக்கலாம்.