உலகின் எனக்கு மிகவும் பிடித்தமானவர் ராணி எலிசபெத்: கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கம்!
உலகில் எனக்கு பிடித்த மனிதர்களில் ஒருவர் பிரித்தானிய மகாராணி.
ராணி எலிசபெத் கனடா மக்கள் மீது ஆழமான மற்றும் நிலையான அன்பும் பாசமும் கொண்டிருந்தார் என கனேடிய பிரதமர் உருக்கம்.
உலகில் தனக்கு மிகவும் பிடித்த மனிதர்களில் ஒருவர் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் உயிரிழந்தார்.
Canadian Prime Minister Justin Trudeau offered condolences to the British royal family on the death of Queen Elizabeth, who passed away peacefully at her Scottish home aged 96 https://t.co/fHVlg62ysv pic.twitter.com/isu2C3LjZn
— Reuters (@Reuters) September 8, 2022
இதனைத் தொடர்ந்து பிரித்தானிய மகாராணிக்கு ராயல் குடும்பத்தினர்கள், உலக தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உலகில் தனக்கு பிடித்த மனிதர்களில் ராணி எலிசபெத்-தும் ஒருவர் என தெரிவித்து தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினார்.
மேலும் கனடாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிக்கு ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், கனடா மக்கள் மீது ஆழமான மற்றும் நிலையான அன்பும் பாசமும் கொண்டிருந்தார் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் கனடாவின் 12 வது பிரதமராக ராணியுடன் இறுதியாக உரையாடியதை நம்புவதில் எனக்கு நிறைய சிக்கல்கள் உள்ளது, நான் அந்த அரட்டைகளை இழக்கிறேன் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தை சிந்தனையுள்ள, புத்திசாலித்தனமான, ஆர்வமுள்ள, உதவிகரமான, வேடிக்கையான மனிதர் எனவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: கேக் ஆர்டர் செய்த காமராஜர்...இளவரசர் ஆண்ட்ரூ-வின் முதல் பிறந்தநாளை சென்னையில் கொண்டாடிய பிரித்தானிய மகாராணி!
கனேடிய முன்னாள் பிரதமர் பியர் எலியட் ட்ரூடோவின் மகனாக ஜஸ்டின் ட்ரூடோ, பிரித்தானிய மகாராணியை 45 ஆண்டுகளாக அறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.