நிறுவனம் ஆரம்பித்த ஒரே ஆண்டில் பில்லியனர்! 8,930 கோடி ஈட்டிய பெண்.. யார் இந்த ஃபெய்?
World Labs என்ற நிறுவனத்தை தொடங்கிய ஃபெய்-ஃபெய் லி ஒரே ஆண்டில் பில்லியனராக மாறியுள்ளார்.
AI நிறுவனம்
சீனாவைச் சேர்ந்த ஃபெய்-ஃபெய் லி (Fei-fei Li) என்ற பெண் அமெரிக்காவில் பிரபலமாகியுள்ள World Labsயின் நிறுவனராக உள்ளார். 
இந்த AI நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட ஒரே ஆண்டில் 1 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ளது.
இதன்மூலம் ஃபெய்-ஃபெய் லி நிறுவனத்தை ஆரம்பித்த ஒரே ஆண்டில் பில்லியனராக மாறியுள்ளார்.
இவர் இதுமட்டுமின்றி, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
யார் இந்த ஃபெய்-ஃபெய் லி?
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஃபெய்-ஃபெய் லி, தனது 15வது வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். அவரது குடும்ப சூழல் இந்த முடிவை எடுக்க வைத்தது.
பின்னர் நியூ ஜெர்சி நகரில் சிறிய கடை ஒன்றில் லி பணிக்கு சேர்ந்தார். அதுமட்டுமன்றி தனது இடத்திற்கு அருகேயிருந்த சீன உணவகங்களிலும் பணியாற்றினார்.
வேலைகள் செய்து வந்தாலும் லி தனது படிப்பை மட்டும் விட்டுவிடவில்லை. அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பையும், கலிஃபோர்னியாவின் கால்டெக்கில் முனைவர் பட்டத்தையும் லி பெற்றார். 
அதன் பின் கூகுள் கிளவுட் நிறுவனத்தில் AI பிரிவில் லி தலைமை அதிகாரியாக சேர்ந்து பணியாற்றினார். எனினும், 2018ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி AI துறையில் தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார்.
இமேஜ்நெட்
அதன் விளைவாக இமேஜ்நெட் என்ற திட்டத்தை கொண்டுவந்தார். இது 2007ஆம் ஆண்டில் அவர் உருவாக்கிய திட்டமாகும்.
பொருட்களை புரிந்துகொள்ள AIக்கு இந்த திட்டம் பெரிதும் உதவியது. அத்துடன் முகத்தை அடையாளம் காணுதல் போன்ற பல விடயங்களையும் AI-க்கு எளிதாக்கியது.
சுருக்கமாக கூற வேண்டுமென்றால் லியின் இமேஜ்நெட் என்பது AI-க்கு பயிற்சி அளிக்கும் கருவியாகும்.
தற்போது 49 வயதாகும் ஃபெய்-ஃபெய் லி, அமெரிக்காவில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை AI உலகில் உருவாக்கியுள்ளார்.
இவரது அபார வளர்ச்சி மூலம் Queen Elizabeth எனும் சிறப்பு பட்டத்தையும் பெற்றுள்ளார். 

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |