மகாராணியின் மரணத்தால் பெரும் இழப்பை சந்திக்கவுள்ள 600 பிராண்டுகள்!
ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு மிகவும் பிடித்த 600 பிராண்டுகள் அதன் ராயல் முத்திரையை இழக்கவுள்ளன. அப்படி இழந்தால், அந்நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்கும்.
இதில் துடைப்பம் முதல் நாய் உணவு உற்பத்தி செய்யும் பிராண்டுகளும் அடங்கும்.
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணமடைந்ததால், அவருக்குப் பிடித்த சுமார் 600 பிராண்டுகள் ராயல் வாரண்ட் முத்திரையை இழக்கவுள்ளன.
அவற்றில் Fortnum மற்றும் Mason டீஸ், Burberry ரெயின்கோட்டுகள், Cadbury சாக்லேட் மற்றும் துடைப்பம் மற்றும் நாய் உணவு உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் கூட அரச கௌரவத்தை இழக்க நேரிடும். அப்படி இழந்தால், அந்நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்கும்.
இந்த பிராண்டுகள் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸின் ஒப்புதல் முத்திரையைப் பெறவில்லை என்றால், இறையாண்மைக்கு விருப்பமான சப்ளையர்களாக அவர்களைக் குறிக்கும் முத்திரையை பயன்படுத்தமுடியாமல் போகும். ஆனால், அந்த முத்திரையை அகற்ற இரண்டு ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்படும்.
வேல்ஸ் இளவரசராக இருந்தபோது மன்னர் மூன்றாம் சார்லஸ் 150-க்கும் மேற்பட்ட பிராண்டுகளுக்கு தனது சொந்த அரச வாரண்டுகளை வழங்கினார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அரச வாரண்டானது தரத்தின் அடையாளமாக இருக்கிறது.
இந்த வாரண்டை வைத்திருப்பவர்கள் "தங்கள் தயாரிப்பு, பேக்கேஜிங், ஸ்டேஷனரி, விளம்பரம், வளாகம் மற்றும் வாகனங்களில் பொருத்தமான அரச முத்திரையை காண்பிக்கும் உரிமையைப் பெறுகிறார்கள்" என்று ராயல் வாரண்ட் ஹோல்டர்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
சில நிறுவனங்களுக்கு, ராயல் அங்கீகாரம் ஒரு சக்திவாய்ந்த விற்பனைப் புள்ளியாகும்.
1954 ஆம் ஆண்டு முதல் Fortnum and Mason நிறுவனம் ராணி எலிசபெத்தின் மளிகை மற்றும் வழங்கல் வணிகர்களாகவும், வேல்ஸ் இளவரசருக்கு தேநீர் வியாபாரிகள் மற்றும் மளிகை வியாபாரிகளாகவும் இருந்தனர்.
1902-ஆம் ஆண்டில் ஏழாம் எட்வர்ட் மன்னருக்காக Royal Blend தேநீரை உருவாக்கிய ஃபோர்ட்னம் மற்றும் மேசன் அரச குடும்பத்துடன் நீண்ட மற்றும் நெருக்கமான வரலாற்றைக் கொண்டுள்ளது.
Twinings ராணி எலிசபெத் மற்றும் வேல்ஸ் இளவரசருக்கு தேநீர் மற்றும் காபி வியாபாரிகளாக அரச வாரண்டுகளை கொண்டிருந்தனர்.
இது போல் Dubonnet, G.H. Mumm et Cie Champagne மதுபானங்கள், Launer கைப்பைகள், Barbour ஜாக்கெட்டுகள், Bollinger, Krug, Lanson, Laurent-Perrier, Louis Roederer, Moet and Chandon and Veuve Clicquot ஆகிய நிறுவங்களும் ராயல் வாரண்ட்களை வைத்திருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, Heinz, Kellogg's போன்ற நிறுவனங்களும் இந்த 600 பிராண்டுகளில் அடங்கும். இவற்றில் பெரும்பாலானவை மகாராணி இரண்டாம் எலிசபெத் மட்டுமின்றி மன்னர் மூன்றாம் சார்சலுக்கும் பிடித்தமான மற்றும் அபிமானமான ப்ராண்டுகளாக இருந்தன.
எலிசபெத் மகாராணியின் 70 ஆண்டுகால ஆட்சியின் போது அரச குடும்பத்திற்கு Kellogg's நிறுவனம் தொடர்ந்து உணவுப் பொருட்களை சப்ளை செய்து வருகிறது.
ராயல் வாரண்டைப் பெறுவதற்கு எந்தச் செலவும் இல்லை, மேலும் சப்ளையர்கள் தங்கள் சேவைகளை வணிக அடிப்படையில் வழங்குபவருக்கு தொடர்ந்து வழங்குகிறார்கள், அதே நேரத்தில் அரச குடும்பத்தார் மற்ற சப்ளையர்களைப் பயன்படுத்த இலவசம்.
ராயல் வாரண்டுகள் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும், ஆனால் புதுப்பிப்பதற்கான அளவுகோல்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதற்கு ஒரு நிறுவனம் சரியான சேவையை வழங்குவது மட்டுமல்லாமல்., ஒரு நல்ல வணிகம் என்பதை காட்ட வேண்டும், குறிப்பாக மனித உரிமைகள் தொடர்பாக சிறந்த ஒன்றாக இருக்கவேண்டும்.
ராயல் வாரண்ட் என்பது சில பிரித்தானியர்கள் தங்கள் பொருட்களையும் சேவைகளையும் தேர்ந்தெடுக்கும் போது பயன்படுத்தும் தரத்திற்கான உத்தரவாதமாகும்.