பாகிஸ்தானுக்கு எதிராக இமாலய சாதனை படைத்த டி காக்
தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் ஒருநாள் போட்டிகளில் விரைவாக 7000 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தார்.
டி காக் 53 ஓட்டங்கள்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 143 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. 
இப்போட்டியில் குயிண்டன் டி காக் (Quinton de Kock) 70 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 7000 ஓட்டங்களை கடந்தார். 158வது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், அதிவேகமாக 7000 ஓட்டங்கள் எடுத்த இரண்டாவது வீரர் ஆனார் டி காக்.
இதற்கு முன், 150 இன்னிங்ஸ்களில் 7000 ஓட்டங்கள் கடந்து சாதனை படைத்த ஹஷிம் ஆம்லா இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
மேலும், தென் ஆப்பிரிக்க அணிக்காக 7000 ஓட்டங்கள் குவித்த 5வது வீரர் டி காக் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிவேகமாக 7000 ஓட்டங்கள் குவித்தவர்கள்
1.ஹஷிம் ஆம்லா - 150 இன்னிங்ஸ்
2.குயிண்டன் டி காக் - 158 இன்னிங்ஸ்
3.கேன் வில்லியம்சன் - 159 இன்னிங்ஸ்
4.விராட் கோஹ்லி - 161 இன்னிங்ஸ்
5.ஏபி டி வில்லியர்ஸ் - 166 இன்னிங்ஸ்
6.ஜோ ரூட் - 168 இன்னிங்ஸ்
7.சௌரவ் கங்குலி - 174 இன்னிங்ஸ்
8.ரோஹித் ஷர்மா - 181 இன்னிங்ஸ்
9.பிரையன் லாரா - 183 இன்னிங்ஸ்
10.மார்ட்டின் கப்தில் - 186 இன்னிங்ஸ்
🚨 𝑴𝑰𝑳𝑬𝑺𝑻𝑶𝑵𝑬 🚨
— Sportskeeda (@Sportskeeda) November 8, 2025
Quinton de Kock completes 7000 ODI runs — becoming the fifth Proteas batter to reach this milestone and the second-fastest to do so, in just 158 innings! 🇿🇦👏#QuintondeKock #ODIs #SouthAfrica #Sportskeeda pic.twitter.com/CMRwmnbaab
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |