இலங்கை ஜாம்பவான் சங்ககாரா, பாண்டிங் ஆகியோரின் சாதனையை முறியடித்த டி காக்
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசியதன் மூலம், குயிண்டன் டி காக் ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்தார்.
குயிண்டன் டி காக் சதம்
விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் குயிண்டன் டி காக் சதம் அடித்தார்.
அவர் 89 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 106 ஓட்டங்கள் விளாசினார். 
இதன்மூலம் இந்திய அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த சனத் ஜெயசூரியாவின் சாதனையை சமன் செய்தார்.
சனத் ஜெயசூரியா (Sanath Jayasuriya), குயிண்டன் டி காக் (Quinton de Kock) இருவரும் இந்தியாவுக்கு எதிராக 7 சதங்கள் அடித்துள்ளனர். 
டி காக், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஏபி டி வில்லியர்ஸ், குமார் சங்ககாரா (Kumar Sangakkara), ரிக்கி பாண்டிங் ஆகியோரை முந்தினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 23 ஒருநாள் சதங்கள், 6 டெஸ்ட் சதங்கள், ஒரு டி20 சதம் என டி காக் மொத்தம் 30 சதங்கள் அடித்துள்ளார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |