மைக்ரோசாப்ட் வேலையை விட்டுவிட்டு சொந்தமாக தொடங்கிய நிறுவனம்... சந்தை மதிப்பு தற்போது ரூ 37,290 கோடி
அமெரிக்காவில் அதிக சம்பளத்தில் மைக்ரோசாப்ட் வேலையை விட்டுவிட்டு சொந்தமாக தொடங்கிய நிறுவனம் மூலமாக பல கோடிகளை சம்பாதித்து வருகிறார் டெல்லியை சேர்ந்த ஒருவர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை
டெல்லியை சேர்ந்த Peyush Bansal என்பவரே மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலையை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கும் பொருட்டு இந்தியா திரும்பியவர்.
இந்தியா முழுக்க பரவலாக பல கிளைகள் கொண்ட Lenskart நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான 38 வயது பெயுஷ் பன்சால் தொழிலதிபர், வணிக நிர்வாகி மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளராகவும் உள்ளார்.
கனடாவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த பன்சால் கடந்த 2010ல் Lenskart நிறுவனத்தை தொடங்கினார். தற்போது இந்த கண் கண்ணாடி நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது ரூ 37,290 கோடி என்றே கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் உள்ள ADIA அமைப்பில் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை ஈர்த்த நிலையிலேயே, Lenskart நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 37,290 கோடி என்று அதிகரித்துள்ளது.
unicorn அந்தஸ்தையும் பெற்ற Lenskart
Lenskart தொடங்கும் முன்னர் 2007ல் கல்லூரி மாணவர்கள் தங்களுக்கான உரிய வேலையை தேடும் பொருட்டு SearchMyCampus என்ற நிறுவனத்தையும், 2009ல் Flyer என்ற நிறுவனத்தையும் தொடங்கியிருந்தார்.
2010ல் தான் Amit Chaudhary மற்றும் Sumeet Kapahi ஆகியோருடன் இணைந்து Lenskart நிறுவனத்தை தொடங்கினார். 2020ல் Lenskart நிறுவனம் 1 பில்லியன் டொலர் மதிப்பை எட்டியதுடன் unicorn அந்தஸ்தையும் பெற்றது.
வெளியான தரவுகளின் அடிப்படையில், பன்சாலின் சொத்து மதிப்பு சுமார் ரூ.600 கோடி என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |