கதிகலங்க வைத்த ராச்சின் ரவீந்திரா! டெஸ்டில் 185 பந்துகளில் 176 ஓட்டங்கள்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில், நியூசிலாந்தின் டாம் லாதம் மற்றும் ரச்சின் ரவீந்திரா சதம் விளாச 481 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் கூட்டணி
கிறிஸ்ட்சர்ச்சின் ஹாக்லே ஓவல் மைதானத்தில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது. 
கேன் வில்லியம்சன் 9 ஓட்டங்களிலும், டெவோன் கான்வே 37 ஓட்டங்களிலும் வெளியேற, டாம் லாதம் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் வலுவான கூட்டணி அமைத்தனர்.
அணித்தலைவர் டாம் லாதம் (Tom Latham) நிதானமாக ஆடி 14வது சதத்தை நிறைவு செய்தார். மேலும், டெஸ்டில் 6000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.
481 ஓட்டங்கள் முன்னிலை
மறுமுனையில் அதிரடியாக ஆடிய ரச்சின் ரவீந்திராவும் (Rachin Ravindra) சதம் விளாசினார். அணியின் ஸ்கோர் 379 ஆக உயர்ந்தபோது, டாம் லாதம் 145 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். 
லாதம்-ரவீந்திரா கூட்டணி 279 ஓட்டங்கள் குவித்தது. இரட்டை சதத்தை நோக்கி ஆடிய ரவீந்திரா 185 பந்துகளில் 1 சிக்ஸர், 27 பவுண்டரிகளுடன் 176 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ஓஜய் ஷீல்ட்ஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.
மூன்றாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 417 ஓட்டங்கள் குவித்துள்ளது. மேலும் 481 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
வில் யங் 21 ஓட்டங்களுடனும், மைக்கேல் பிரேஸ்வெல் 6 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். கேமர் ரோச், ஷீல்ட்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |