ரத்தம் சொட்ட மைதானத்தில் இருந்து வெளியேறிய ரச்சின்: பதறிய பார்வையாளர்கள் (வீடியோ)
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரச்சின் ரவீந்திரா படுகாயமடைந்து வெளியேறினார்.
லாகூரில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இப்போட்டியில் 37வது ஓவரில் பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷா அடித்த பந்தை, கேட்ச் பிடிக்க முயன்றபோது ரச்சின் ரவீந்திராவின் முகத்தில் பட்டு காயம் ஏற்பட்டது.
A tough moment on the field for Rachin Ravindra as an attempted catch turned into an unfortunate injury. 🤕
— FanCode (@FanCode) February 8, 2025
Get well soon, Rachin! pic.twitter.com/34dB108tpF
இதில் அவருக்கு ரத்தம் வந்ததால் உடனடியாக உதவியாளர்கள் விரைந்து வந்து அழைத்துச் சென்றனர்.
ரவீந்திரா காயமடைந்தது பார்வையாளர்களிடையே சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |