கொரோனா தடுப்பூசி... யாருக்கு முன்னுரிமை? உண்மையை ஒப்புக்கொண்ட அமெரிக்க நகர மேயர்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனா தடுப்பூசி வழங்குவதில் இன பாகுபாடு காட்டப்படுவதை நகர மேயர் ஒப்புக்கொண்டுள்ளார்.
நியூயார்க் நகரில் கருப்பு மற்றும் லத்தீன் இன மக்கள் வெள்ளை அல்லது ஆசிய நியூயார்க்கர்களை விட மிகக் குறைந்த விகிதத்தில் கொரோனா தடுப்பூசிகளைப் பெறுகின்றனர் என மேயர் பில் டி பிளாசியோ ஞாயிற்றுக்கிழமை ஒப்புக் கொண்டுள்ளார்.
இருப்பினும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வகையில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
நியூயார்க் நகரில் இதுவரை தடுப்பூசி கிடைத்தவர்களில் 48 சதவீதம் வெள்ளை இன மக்கள் எனவும்,
ஆனால் 24 சதவீதம் கொண்ட கருப்பின மக்களில் வெறும் 11 சதவீத மக்களுக்கே கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும்,
15 சதவீதம் அளவுக்கு லத்தீன் அமெரிக்க மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ள நிலையில், நியூயார்க் நகர மொத்த மக்கள் தொகையில் 14 சதவீதமே உள்ள ஆசிய நாட்டவர்களுக்கு மொத்தமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்று நியூயார்க் நகரத்திலும், நாடு முழுவதிலும் அதிக விகிதத்தில் கருப்பு மற்றும் லத்தீன் இன மக்களையே அதிகம் பலிவாங்கியதாக கூறப்படுகிறது.