19 வயது மாணவி மற்றும் குடும்பத்தாரிடம் நெருங்கி பழகிய ஓட்டப்பந்தய பயிற்சியாளர்! 4 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான பகீர் சம்பவம்
அமெரிக்காவில் ஓட்டப்பந்தய பயிற்சியாளர் தன்னிடம் பயின்ற மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவத்தில் 4 ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Kemah-வை சேர்ந்தவர் Floyd Thompson Jr. இவர் ஓட்டப்பந்தய பயிற்சியாளராக பணியாற்றினார்.
கடந்த 2016ல் இருந்து 2018 வரையிலான காலக்கட்டத்தில் தன்னிடம் பயிற்சி பெற்ற 19 வயது மாணவியிடம் அவர் நெருக்கமாக பழகியுள்ளார். அவர் குடும்பத்தாரிடமும் நெருங்கி பழகியுள்ளார்.
மாணவிக்கு சிறப்பு பயிற்சி அளித்ததோடு அவருடன் அதிக நேரம் தனிமையில் இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் அவரிடம் பல முறை தவறாகவும் நடந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான் Floyd Thompson Jrக்கு திருமணம் நடந்து முடிந்தது.
திருமணத்துக்கு பின்னரே அவர் மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து சமீபத்தில் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவரால் மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.
கைது செய்யப்பட்ட Floyd Thompson Jrக்கு ஜாமீன் தொகையாக $100,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.