2024-ல் சுவிட்சர்லாந்தில் இனவெறி வழக்குகள் 20% உயர்வு!: கவலை தரும் புள்ளிவிவரங்கள்
2024-ல் சுவிட்சர்லாந்தில் இனவெறி வழக்குகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் இனவெறி வழக்குகள் அதிகரிப்பு
இனவெறிக்கு எதிரான கூட்டாட்சி ஆணையம் (FCR) வெளியிட்டுள்ள புதிய அதிர்ச்சித் தகவல் படி, 2024 ஆம் ஆண்டில் பதிவான இனவெறி சம்பவங்கள் யாரும் எதிர்பாராத வகையில் 20% அதிகரித்துள்ளது.
இந்த புள்ளிவிவரங்கள் சுவிட்சர்லாந்து சமூகத்தில் பாகுபாடு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளது.
FCR ஆய்வின்படி, பெரும்பாலான இனவெறி சம்பவங்கள் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் இடங்களான கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் நிகழ்ந்துள்ளன.
மிகவும் கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால், கறுப்பின மக்கள் மீதான இனவெறி மற்றும் வெளியாட்களை வெறுக்கும் மனப்பான்மை (xenophobia) போன்ற சம்பவங்களே அதிக அளவில் பதிவாகியுள்ளன.
அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள்
புள்ளிவிவரங்கள் படி, 2024 ஆம் ஆண்டில் மட்டும் 1,211 இனவெறி வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 2023 ஆம் ஆண்டில் பதிவான 876 வழக்குகளை விட 335 வழக்குகள் அதிகம்.
அதாவது, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 40% இனவெறி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த கணிசமான உயர்வு சுவிட்சர்லாந்தில் நிலவும் சூழ்நிலையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
இந்த திடீர் அதிகரிப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
பொது விவாதங்களில் நிலவும் துருவமுனைப்பு மற்றும் சர்வதேச அரசியல் சூழல் ஆகியவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
அதே சமயம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஆலோசனை மையங்களின் அதிகரித்த விழிப்புணர்வு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன் வருவது போன்ற காரணங்களாலும் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம்.
வாழ்க்கை முறை அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்களை ஆராய்ந்ததில், கல்வித்துறையில் (19%) அதிக எண்ணிக்கையிலான இனவெறி புகார்கள் வந்துள்ளன.//// குறிப்பாக, கட்டாயக் கல்வி பெறும் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பது மிகவும் கவலை அளிக்கிறது.
தாய் ஒருவர் தனது மகன் வகுப்பறையில் ஒதுக்கி வைக்கப்பட்டதையும், ஹிட்லர் வணக்கம் மற்றும் வலதுசாரி தீவிரவாத சின்னங்கள் பயன்படுத்தப்பட்டதையும் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |