அமெரிக்காவில் இலங்கையர் மீது இனவெறித்தாக்குதல்: எங்கு சென்றாலும் ஆசியர்களை விடாமல் துரத்தும் இனவெறி
உள்நாட்டில் பிரச்சினைகளுக்குத் தப்பி வெளிநாடுகளுக்கு சென்று நிம்மதியாக வாழலாம் என செல்லும் மக்களை, அங்கே இனவெறித்தாக்குதல்கள் துரத்துகின்றன...என்ன செய்வார்கள் மக்கள்?
அமெரிக்காவில் ஆசியர்கள் மீதான இனவெறித்தாக்குதல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன. கொரோனா தொடங்கிய நேரத்தில், ஆசியர்கள்தான் கொரோனாவைக் கொண்டுவந்துவிட்டார்கள் என்று கூறி அடித்தார்கள்.
இப்போது காரணமே இல்லாமல், கண்ட இடத்தில் எல்லாம் ஆசியர்களை தாக்குகிறார்கள். செவ்வாய்க்கிழமை, நியூயார்க் சுரங்க ரயில் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த ஆசிய நாட்டுப் பெண்மணி ஒருவர் மீது வெள்ளையர் ஒருவர் சிறுநீர் கழித்திருக்கிறார்.
அவருக்கு உதவக்கூட யாரும் முன்வரவில்லை! அதே நியூயார்க் சுரங்க ரயிலில், கடந்த வெள்ளிக்கிழமை, செக்யூரிட்டியாக பணியாற்றும் இலங்கையரான Narayange Bodhi (68) என்பவர் வேலைக்கு சென்றுகொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, திடீரென கருப்பினத்தவரான Marc Mathieu (36) என்பவர், கெட்ட வார்த்தையால் திட்டியபடி Bodhiயின் முகத்தில் ஓங்கிக் குத்தியிருக்கிறார்.
முகத்தில் இரத்தம் சொட்டச்சொட்ட Bodhi அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தற்போது Marc கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றம், அவரது செயல் இனவெறித்தாக்குதல்தான் என முடிவு செய்துள்ளது.
இதை எப்படி எடுத்துக்கொள்வதென்று தெரியவில்லை... கருப்பினத்தவரை வெள்ளையினத்தனர் தாக்குகிறார்கள், அவர்களுக்கு ஆதரவாக உலகமே குரல் கொடுக்கிறது.
பார்த்தால், அதே கருப்பினத்தவர்கள் ஆசிய நாட்டவர்களை தாக்குகிறார்கள்... இது எப்படி முடியும், உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது தெரியவில்லை.
முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்னதுபோல, அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்று சொல்லி மற்றவர்களை அமெரிக்காவைவிட்டே துரத்திவிடலாமா?
அப்படியானால் தங்கள் நாடுகளிலேயே துன்புறுத்தலுக்குள்ளாகும் மக்கள், தங்கள் நாட்டிலும் வாழமுடியாமல், வெளிநாடுகளிலும் நிம்மதியாக வாழமுடியாமல் எங்கே செல்வார்கள்?

