இளைஞரின் வெறிச்செயல்... கொத்தாக கொல்லப்பட்ட மக்கள் பலர்: 90 ஆயுள் தண்டனை விதிப்பு
அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் புகுந்து துப்பாகியால் கொலைவெறி தாக்குதல் முன்னெடுத்த இளைஞருக்கு 90 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
90 ஆயுள் தண்டனை
டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் 2019ல் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திலேயே, ,குற்றவாளியான 24 வயது இளைஞர் Patrick Crusius என்பவருக்கு 90 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
@getty
பொலிசார் தெரிவிக்கையில், டல்லாஸ் பகுதிக்கு அருகாமையில் உள்ள தமது குடியிருப்பில் இருந்து சுமார் 700 மைல்கள் வாகனம் ஓட்டிச் சென்று ஸ்பெயின் வம்சாவளியினர் அதிக வாழும் பகுதியில் தாக்குதல் முன்னெடுத்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதல் முன்னெடுக்கப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்னர், டெக்சாஸ் மாகாணத்தில் ஸ்பெயின் நாட்டவர்கள் ஊடுருவி இருப்பதை கடுமையாக விமர்சித்து பதிவு செய்த Patrick Crusius, அவர்களுக்கு எதிராக எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.
கடந்த பிப்ரவரியில் பெடரல் சட்டத்தரணிகள் மரண தண்டனை விதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மரண தண்டனை உறுதி
ஆனால், 23 பேர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள இனவாதியான இளைஞருக்கு மரண தண்டனை பெற்றுத்தர இறுதிவரை போராடுவோம் என டெக்சாஸ் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
@getty
இந்த விவகாரம் தொடர்பில் Patrick Crusius தரப்பு சட்டத்தரணி தெரிவிக்கையில், நாட்டு நடப்பு குறித்து எதுவும் தெரிந்துகொள்ளாத, மூளை வளர்ச்சியற்ற இளைஞர் Patrick Crusius என நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண நிதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு கொண்டுவரப்பட்டால், அந்த இளைஞருக்கு மரண தண்டனை உறுதி என சட்டத்தரணிகள் சவால் விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |