வளைந்த கழுத்தால் ஏளனம் செய்யப்பட்ட சிங்கப்பெண்ணின் நிறுவன மதிப்பு மட்டும் ரூ.1 லட்சம் கோடி
7 முறை நேர்காணலில் தோல்வியடைந்த ராதிகா குப்தாவின் நிறுவனத்தினுடைய மதிப்பு ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இவரின் கதையை தான் பார்க்க போகிறோம்.
உருவ தோற்றத்தால் பல முறை கேலி
பாகிஸ்தானில் பிறந்த ராதிகா குப்தா பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல் காரணமாக கழுத்தில் பாதிப்புடன் பிறந்தார். இதனால், இவரது கழுத்து சற்று வளைந்து காணப்படும். இவருடைய தந்தை ஒரு இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இவர், தனது குழந்தை பருவத்தில் இருந்தே உருவத்தோற்றத்தால் பலமுறை கேலிக்கு உள்ளானார். பள்ளியில் படிக்கும் போது சக மாணவர்கள் அடிக்கடி கேலி செய்தனர்.
ஆனால், இவர் அதை பொருட்படுத்தாமல் தனது திறமை மற்றும் அறிவால் உயர்ந்து நின்று பலருக்கும் பதிலடி கொடுத்துள்ளார். இன்று எடெல்வீஸ் மியூச்சுவல் ஃபண்டின் (Edelweiss MF) தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்து நிற்கிறார்.
நிறுவனத்தில் CEO
பல சோதனைகளை கடந்த ராதிகா குப்தா பள்ளி படிப்பை முடித்து, அமெரிக்காவில் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸில் பட்டமும் பெற்றார். இவர் அளித்த பேட்டி ஒன்றில், "7 முறை நேர்காணலில் நிராகரிக்கப்பட்டதாகவும், 22 வயதில் தனக்கு தற்கொலை வந்ததாகவும்" கூறியிருந்தார்.
பின்னர், தனது 25 வயதில் இந்தியா வந்து கணவர் மற்றும் நண்பருடன் சேர்ந்து ஒரு சொத்து மேலாண்மை நிறுவனத்தைத் தொடங்கினார். சில ஆண்டுகளுக்கு பிறகு இவரது நிறுவனமானது Edelweiss MF ஆல் கையகப்படுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, தனது 33 வயதில் 2017 -ம் ஆண்டில் ரூ.9,128 கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியானார். அடுத்து, ஜனவரி 2023 -ம் ஆண்டிற்குள் இவரது சொத்து மேலாண்மை நிறுவனத்தின் மதிப்பு ரூ.1,01,406 கோடியாக உயர்ந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |