பாக்யராஜுக்கு அஞ்சலி செலுத்தும் இடம் சர்க்கஸ் போல் ஆகிவிட்டது - கொந்தளித்த ராதிகா
பாக்யராஜுக்கு அஞ்சலி செலுத்தும் இடம் சர்க்கஸ் போல் ஆகிவிட்டதாக நடிகை ராதிகா வேதனை தெரிவித்துள்ளார்.
பாக்யராஜ் உடல் தகனம்
பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் கடந்த ஜூன் 27 ஆம் திகதி மாரடைப்பால் காலமானார்.
நுங்கம்பாக்கத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பாக்யராஜின் உடலுக்கு முதல்வர் விஜய் மற்றும் திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர், பெசன்ட் நகர் மின்மயானத்தில் வைத்து காவல் துறையினர் 72 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
அவரது வீட்டிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த திரைத்துறையினரிடம் செய்தியாளர்கள் மைக்கை நீட்டி கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
சர்க்கஸ் போல் ஆகிவிட்டது
இதனை கண்டு ஆத்திரமடைந்த நடிகை ராதிகா, 'உங்களுக்கு டிஆர்பி வேண்டுமென்றால் தனியாக சினிமாவில் நடித்து தருகிறோம். எங்களுக்கு கொஞ்சம் Privacy கொடுங்கள். இந்த இடத்தை சர்க்கஸ் ஆக்காதீர்கள்" என கூறினார்.

இதனைத்தொடர்ந்து தனது சமூகவலைதள பக்கத்திலும் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்த பதிவில், "50 ஆண்டுகளாக சிறப்பான நட்புக்கு என் இறுதி வழியனுப்புதல். சிறந்த படைப்பாளி, எழுத்தாளர். சினிமாவில் பல எல்லைகளை கடந்தவர். நான் பல சிரிப்புகளையும், மறக்க முடியாத அனுபவங்களையும் பகிர்ந்துகொண்ட மனிதர். என் குடும்பத்துக்கு எப்போதும் துணையாக நின்றவர்.
அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் இது அதிர்ச்சியான பிரிவு. அமைதியாக துக்கம் அனுசரிக்க வேண்டிய இடம் ஒரு சர்க்கஸ் போல் ஆகிவிட்டது. நாம் எப்போது இவ்வளவு இரக்கமற்றவர்களாக மாறினோம்.
Final goodbye,to 50 years of a very special friendship ,a great creator,a evolved writer,a person who drew wonderful boundaries in Cinema,a man I shared many laughs,wonderful work, who stood by my family always in his quiet loyal way. A shocking goodbye, for his family, friends,… pic.twitter.com/8GeRJ5sipP
— Radikaa Sarathkumar (@realradikaa) June 29, 2026
இனி இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாத வகையில் அரசும், திரையுலகமும் சேர்ந்து உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும். மறைந்தவருக்கு மரியாதையும், கண்ணியமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |