செர்னோபில் அணு மின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு கசியும் அபாயம்! உக்ரைன் எச்சரிக்கை
உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு கசியலாம் என உக்ரேனிய அரசு நடத்தும் அணுசக்தி நிறுவனமான Energoatom எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைன் மீது முழுவீச்சில் படையெடுத்து வரும் ரஷ்யா படைகள், செர்னோபில் அணுமின் நிலையத்தை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் Energoatom வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு கசியலாம், ஏனெனில் அதன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை குளிர்விக்க முடியாது.
மோதலால், உடனடியாக அணு மின் நிலையத்திற்கான மின் இணைப்பை சரிபார்க்க முடியவில்லை.
செர்னோபிலில் சுமார் 20,000 எரிபொருள் assemblies இருந்தன, மின் தடை காரணமாக அவற்றை குளிர்விக்க முடியவில்லை. அவை வெப்பமயமாதல் சுற்றுச்சூழலில் கதிர்வீச்சு கசிவதற்கு வழிவகுக்கும்.
கதிர்வீச்சு மேகம் காற்றின் மூலம் உக்ரைன், பெலாரஸ், ரஷ்யா மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படலாம்.
மின்சாரம் இல்லாமல், ஆலையில் காற்றோட்டம் அமைப்புகளும் இயங்காது. இதனால் ஊழியர்கள் ஆபத்தான அளவு கதிர்வீச்சுக்கு ஆளாகக்கூடும் என Energoatom அறிக்கையில் தெரிவித்துள்ளது.