மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான தகவல்: அடுத்து நடந்த விடயம்
மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக தனியார் வானொலி ஒன்று தெரிவித்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
மன்னர் சார்லஸ் இறந்துவிட்டதாக வெளியான தகவல்
இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கிவரும் தனியார் வானொலி, ரேடியோ கரோலின். செவ்வாயன்று வழக்கம்போல பாடல்கள் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த நிலையில், திடீரென நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து, மன்னர் சார்லஸ் மரணடைந்து விட்டதால், நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக வானொலி அறிவிப்பாளர் தெரிவிக்க, நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் பரபரப்பாகியுள்ளார்கள்.
15 நிமிடங்கள் நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்ட நிலையில், வானொலி அறிவிப்பாளர், தவறுதலாக மன்னர் மரணமடைந்துவிட்டதாக அறிவிப்பு வெளியானதாகக் கூறி, மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதாவது, எல்லா பிரித்தானிய ஊடகங்களுமே, மன்னரின் மரணம் தொடர்பான ஒரு செய்தியை தயாராக வைத்திருக்குமாம்.
அப்படி ரேடியோ கரோலின் வைத்திருந்த ஒரு செய்தி, கணினியில் ஏற்பட்ட தவறு காரணமாக ஒலிபரப்பாகிவிட்டதாக அந்த வானொலி நிலையம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |