ஈரானின் புதிய ஜனாதிபதி யார்? தேர்தல் முடிவு குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்
ஈரானில் ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 90% வரை எண்ணப்பட்டுள்ள நிலையில் இப்ராஹிம் ரைசி வெற்றிப்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரானில் ஜூன் 18ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இன்று ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து ஈரான் தேர்தல் தலைமையகத்தின் செய்தித்தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் கூறியதாவது, 90% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களில் சையத் இப்ராஹிம் ரைசி 1,78,00,000 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
Mohsen Rezaee 3.3 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளையும், Abdolnasser Hemmati 2.4 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளையும், Seyed Amir Hossein Qazizadeh Hashemi 1 மில்லியன் வாக்குகளையும் பெற்றுள்ளார் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
செல்லா வாக்குகளின் எண்ணிக்கை குறித்து தற்போது அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
60 வயதான ரைசி ஈரானின் தற்போதைய நீதித்துறை தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரைசி 2017ல் தற்போதைய ஜனாதிபதி Hassan Rouhani-யின் தேர்தலில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.