ஓய்வை அறிவித்த டென்னிஸ் உச்ச நட்சத்திரம்: ரசிகர்கள் அதிர்ச்சி
இந்த மாதம் நடைபெறும் பிரெஞ்சு ஓபனில் இருந்து விலகுவதாக ரஃபேல் நடால் அறிவித்துள்ள நிலையில், டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாகவும் சூசகமாக தெரிவித்துள்ளார்.
2024 ல் ஓய்வு பெறுவார்
இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜனவரி மாதத்தில் இருந்தே ரஃபேல் நடால் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். இந்த நிலையில் தற்போது பிரெஞ்சு ஓபனில் இருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
மேலும், 2024 ல் ஓய்வு பெறுவார் என்றும் நடால் தெரிவித்துள்ளார். அத்துடன், சில மாதங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு, ஓய்வு பெறவிருக்கும் ஆண்டில் என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்ய இருப்பதாகவும் நடால் குறிப்பிட்டுள்ளார்.
14 முறை பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றுள்ள நடால், சமீபத்திய மாதங்களில் காயம் காரணமாக மிகவும் சோர்வாக உணர்ந்ததை அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த நான்கு மாதங்களாக தம்மால் இயன்ற அளவு போராடி வருவதாகவும் நடால் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் மூன்றாவது சுற்றில் மெக்கன்சி மெக்டொனால்டிடம் தோல்வியடைந்தபோது அவரது தசைநார் தசையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து 6ல் இருந்து 8 வாரங்களில் குணமடைந்து போட்டிகளில் பங்கேற்க முடியும் என நம்பியிருந்தவருக்கு, திட்டமிட்டபடி காயத்தில் இருந்து மீண்டுவர முடியாமல் போனது.
ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்
மட்டுமின்றி, வேறு சிகிச்சைகள் முன்னெடுக்கும் நிலையும் ஏற்பட்டது. பயிற்சிக்கு திரும்பினாலும், அவரால் வலி இல்லாமல் முழுமையான தீவிரமான பயிற்சியை மேற்கொள்ள முடியாமல் போனது.
@getty
இந்த நிலையில், தாம் எப்போது முறையான பயிற்சிக்கு திரும்புவேன் என்பது தற்போதைய நிலையில் குறிப்பிட முடியாமல் உள்ளது என விளக்கமளித்துள்ளார். இதனையடுத்தே, 2024ல் ஓய்வு பெறும் முடிவுக்கு வந்துள்ளதாக நடால் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
நடாலின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே இருக்கும் என நம்பப்படுகிறது.