குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான ராகி பிரௌனி.., எப்படி செய்வது?
இந்த சுவையான ராகி பிரௌனியை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் சத்தான ராகி பிரௌனி வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெண்ணெய்- 100g
- டார்க் சாக்லேட்- 150g
- ராகி மாவு- 100g
- கோகோ பவுடர்- 20g
- பேக்கிங் பவுடர்- 1 ஸ்பூன்
- முட்டை- 2
- வெண்ணிலா எசன்ஸ்- 1 ஸ்பூன்
- நாட்டுசர்க்கரை- 85g
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், டார்க் சாக்லேட் சேர்த்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோகோ பவுடர் மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் முட்டை, வெண்ணிலா எசன்ஸ் மற்றும் நாட்டுசர்க்கரை சேர்த்து நன்கு கலந்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் முட்டை கலவையில் டார்க் சாக்லேட் கலவை மற்றும் சலித்த மாவு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
இதனை அடுத்து ஒரு பேக்கிங் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, இந்த கலவையை ஊற்றவும்.
இறுதியாக மைக்ரோவேவ் அவனில் 180°C-ல் 30 நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் சுவையான சத்தான ராகி பிரௌனி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |