உடல் வலுவிற்கு சத்தான ராகி இடியாப்பம்.., இலகுவாக செய்வது எப்படி?
ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்களும் நிறைந்துள்ளன.
அந்தவகையில், சத்துக்கள் நிறைந்த ராகியில் சுவையான இடியப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு - 2 கப்
- நெய் - 1 ஸ்பூன்
- உப்பு - ¼ ஸ்பூன்
- சூடான நீர் - 2 கப்
- தேங்காய்- 1
செய்முறை
முதலில் ராகி மாவை எடுத்து அதில் நெய் மற்றும் உப்பு சேர்த்து உதிரி உதிரியாக வருவது போல பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு இதில் சூடான தண்ணீரைச் சேர்த்து தோசை மாவு போல கரைத்துக் கொள்ளலாம்.
இப்போது இந்த மாவை பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து சற்று கெட்டியான கலவையாக மாறும் வரை கலக்க வேண்டும்.
அதன் பிறகு, இந்தக் கலவையை 5 நிமிடம் ஆறவைத்து கைகளில் எண்ணெய் தடவி 5 நிமிடம் நன்கு பிசையவும்.
பின்னர் இதை சிறிய உருண்டைகளாக உருட்டி இடியாப்பம் பிழியும் உருளையில் போட்டு வாழை இலையில் பிழிந்து கொள்ளலாம்.
இறுதியாக இந்த ராகி இடியாப்பத்தை இட்லி பாத்திரத்தில் வைத்து மிதமான தீயில் வேக வைத்து எடுத்து தேங்காய் துருவல் தூவி சாப்பிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |