உடல் எடையை குறைக்க உதவும் ராகி இட்லி.., எப்படி செய்வது?
ராகி கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவு ஆகும்.
இது எலும்புகளை வலிமையாக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
தினசரி உணவில் சேர்ப்பது நாள் முழுவதும் ஆற்றலைத் தந்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அந்தவகையில், சத்தான ராகியில் இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி- 3 கப்
- அரிசி- 1 கப்
- வெந்தயம்- 1 ஸ்பூன்
- உளுந்து- 1 கப்
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி, அரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து 2- 3 முறை நன்கு கழுவி 5 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
பின் மற்றொரு பாத்திரத்தில் உளுந்து சேர்த்து 2- 3 முறை நன்கு கழுவி 5 மணி நேரம் தனியாக ஊறவைத்துக்கொள்ளவும்.
அடுத்து கிரைண்டரில் முதலில் உளுந்தை தனியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதனைத்தொடர்ந்து ஊறவைத்த ராகி, அரிசி கலவையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் அரைத்த இவ்விரண்டையும் ஒன்றாக சேர்த்து உப்பு போட்டு கலந்து இரவு முழுவதும் புளிக்கவைக்கவும்.
இறுதியாக இதனை இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்தால் சத்தான ராகி இட்லி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |