உடல் வலுப்பெற இந்த ஒரு லட்டு போதும்.., இலகுவாக செய்வது எப்படி?
ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்களும் நிறைந்துள்ளன.
இதில் குறைந்த அளவில் கொழுப்பு சத்து உள்ளது மற்றும் நிறைவுறா கொழுப்பு அதிக அளவில் உள்ளது.
இத்தனை சத்து நிறைந்த ராகியில் சாத்தான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு- ½ கப்
- வெல்லம்- ½ கப்
- நெய்- ஒரு ஸ்பூன்
- முந்திரி- 5
- கருப்பு எள்- ஒரு ஸ்பூன்
- உலர் திராட்சை- ஒரு ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ¼ கப்
- சுக்குத்தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் வெல்லத்தை கொட்டியாக பாகு காய்ச்சி எடுக்க வேண்டும்.
பிறகு இந்த வெல்லப்பாகை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு சிறிய கடாயில் கருப்பு எள்ளை மிதமான தீயில் வைத்து வறுத்து எடுக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து அதே கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ராகி மாவையும் அதே கடாயில் சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும்வரை வறுத்து எடுக்க வேண்டும்.
இதனைதொடர்ந்து வறுத்த ராகி மாவுடன் வெல்லப்பாகு உலர் திராட்சை, கருப்பு எள், வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் தூள் மற்றும் சுக்கு தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
இறுதியாக சூடு ஆறியதும் லட்டாக பிடித்து வைத்தால் போதும் சுவையான ராகி லட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |